- NEET
- மத்திய கல்வி அமைச்சர்
- தர்மமேந்திர பிரதான்
- தேசிய தேர்ச்சி முகமை
- தில்லி
- மத்திய அமைச்சர்
- தேசிய தேர்வுகள் முகமை
டெல்லி : டெல்லியில் தேசிய தேர்வு முகமை அதிகாரிகளுடன் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நாடு முழுவதும் வலுத்துள்ள நிலையில் ஒன்றிய அமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே மாதம் 5-ந் தேதி நடைபெற்றது. இந்த நீட் நுழைவுத் தேர்வு மதிப்பெண்கள் தொடங்கி ஏராளமான முறைகேடு புகார்கள் அடுத்தடுத்து குவிந்து வருகின்றன. குறிப்பாக பீகார் மாநிலத்தில் நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் விற்பனை விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தேர்வு நடைபெறும் ஒரு நாள் முன்பு வினாத்தாள் தங்களுக்கு வழங்கப்பட்டதாக கைதுசெய்யப்பட்ட 4 தேர்வர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
அதே போல், நீட் தேர்வில் முறைகேடு நடந்ததை ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஒப்புக்கொண்டுள்ளார். நீட் தேர்வில் சிறு தவறு நடந்திருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் கண்டிப்புடன் கூறியிருந்தது. இதையடுத்து நீட் தேர்வில் நடந்த முறைகேட்டை கண்டித்து நாளை நாடு தழுவிய போராட்டம் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. ஏற்கனவே பல மாநிலங்களில் நீட் எதிர்ப்பு போராட்டம் நடந்து வரும் நிலையில் காங்கிரஸ் போராட்ட அறிவிப்பால் ஒன்றிய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. UGC NET தேர்வில் ஏற்பட்ட முறைகேட்டால் அத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், ஒன்றிய கல்வி அமைச்சர் ஆலோசனையால் நீட் தேர்வும் ரத்து செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post நீட் நுழைவுத் தேர்வு ரத்தாகுமா ?.. டெல்லியில் தேசிய தேர்வு முகமை அதிகாரிகளுடன் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆலோசனை!! appeared first on Dinakaran.