×

வாரணாசி சுற்றுப்பயணத்தில் மோடியின் கார் மீது செருப்பு வீசப்பட்டதா?

வாரணாசி: மக்களவை தேர்தலில் வென்று தொடர்ந்து 3ம் முறையாக பிரதமர் பதவி ஏற்ற மோடி, நேற்று முன்தினம் தனது சொந்த தொகுதியான உபி மாநிலம் வாரணாசி சென்றார். அங்கு மிகப்பிரமாண்ட பேரணி நடத்தினார். அதை தொடர்ந்து பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்தார். ஆனால் வாரணாசியில் பிரதமர் மோடியின் ரோட் ஷோவில் பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியில் மோடியின் குண்டு துளைக்காத கார் மீது செருப்பு வீசப்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோ நேற்று இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. வாரணாசி வீதிகளில் முழுபாதுகாப்பு கான்வாய் மத்தியில் பிரதமர் மோடி கார் சென்ற போது அவரது முன்புறம் காரில் செருப்பு வீசப்பட்டது. நெரிசலான பகுதி வழியாக சென்றபோது அந்த செருப்பு வீசப்பட்டுள்ளது. இதையடுத்து மோடியின் காரின் இருபுறமும் தொங்கி வரும் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் அந்த செருப்பை எடுத்து வீசுகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

The post வாரணாசி சுற்றுப்பயணத்தில் மோடியின் கார் மீது செருப்பு வீசப்பட்டதா? appeared first on Dinakaran.

Tags : Modi ,Varanasi ,Lok Sabha elections ,UP ,Dinakaran ,
× RELATED வரும் 20ம் தேதி சென்னை வரும் பிரதமர்...