×

300 முறை தோப்புக்கரணம் போட வைத்து சீனியர்கள் ராகிங் கொடுமை.. மருத்துவ மாணவருக்கு சிறுநீரக பாதிப்பு: 7 மாணவர்கள் மீது பாய்ந்தது வழக்கு!!

ஜெய்ப்பூர் : ராஜஸ்தானில் 300 முறை தோப்புக்கரணம் போட வைத்து சீனியர் மாணவர்கள் கொடுமைப்படுத்தியதால் மருத்துவ கல்லூரி மாணவருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது. ராஜஸ்தான் மாநிலம் துன்கார்பூர் பகுதியில் உள்ள மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் முதலாம் ஆண்டு படித்து வந்த மாணவர் ஒருவரை சீனியர் மாணவர்கள் சிலர் ராகிங் செய்து கொடுமைப்படுத்தி உள்ளனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கல்லூரியில் சேர்ந்ததில் இருந்தே அந்த மாணவரை சீனியர்கள் ராகிங் செய்து வந்துள்ளனர். ஆனால் அது குறித்து அவர் புகார் அளிக்காமல் இருந்து வந்துள்ளார். இதனிடையே கடந்த மே மாதம் 15ம் தேதி கல்லூரி அருகே முதலாம் ஆண்டு மாணவரை தோப்புக் காரணம் போட சொல்லி சீனியர் மாணவர்கள் ராகின் செய்துள்ளனர்.

அந்த மாணவரை 300 முறைக்கு மேல் தோப்புக்கரணம் போட வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அந்த மாணவரின் சிறுநீரகத்தில் அதிகளவிலான அழுத்தம் ஏற்பட்டதால் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு 4 முறை டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது. சம்மந்தப்பட்ட கல்லூரின் முதல்வர் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி 7 மாணவர்கள் மீது போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், 2ம் ஆண்டு படித்து வரும் 7 மாணவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post 300 முறை தோப்புக்கரணம் போட வைத்து சீனியர்கள் ராகிங் கொடுமை.. மருத்துவ மாணவருக்கு சிறுநீரக பாதிப்பு: 7 மாணவர்கள் மீது பாய்ந்தது வழக்கு!! appeared first on Dinakaran.

Tags : Jaipur ,Rajasthan ,MBBS ,College ,Dungarpur ,
× RELATED உள்ளாடைகளை கழற்றி சிறுமியை...