தஞ்சாவூர், ஜூன் 19: போக்குவரத்து கழகங்களில் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புதல், 15வது ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளில் தமிழ்நாடு முதலமைச்சர் தீர்வு காண வேண்டும் என போக்குவரத்து ஏஐடியூசி மாநிலம் தழுவிய கையெழுத்து இயக்கம் ஒரத்தநாடு பேருந்து நிலையத்தில் நேற்று நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் பணியாளர்கள் தொழிலாளர்களுக்கு 1.9.23 முதல் 15 வது ஊதிய ஒப்பந்தம் பேசி சம்பள உயர்வு அமல்படுத்தப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் ஒரு வருடம் நெருங்கிய பின்பும் பேச்சுவார்த்தை இன்னும் துவக்கப்படவில்லை. உடனடியாக 15வது ஊதிய ஒப்பந்தம் பேசி சம்பள உயர்வு ஏற்படுத்தப்பட வேண்டும், என்பது உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளில் தமிழ்நாடு முதல்வர் உடனடியாக தீர்வு காணவலியுறுத்தி ஏஐடியூசி சம்மேளனத்தின் சார்பில் மாநிலத் தழுவிய கையெழுத்து இயக்கம்.
நேற்று கம்யூனிஸ்ட் கட்சி ஒரத்தநாடு ஒன்றிய செயலாளர் வாசு இளையராஜா கையெழுத்திட்டு கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் சக்திவேல், ஒரத்தநாடு நகர் செயலாளர் ராஜேந்திரன், ஜனநாயக தொழிற்சங்க மாநிலத் துணைத் தலைவர் அருணாச்சலம், அரசு பணியாளர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் துணைத் தலைவர் திருநாவுக்கரசு, போக்குவரத்து சம்மேளனத்தின் மாநில துணைத்தலைவர் துரை.மதிவாணன், கும்பகோணம் மத்திய சங்க பொருளாளர் ராஜமன்னன் உள்ளிட்டார் பங்கேற்றனர்.
இதே போல் பட்டுக்கோட்டை பணிமனை பேருந்து நிலையத்தில் நேற்று தொழிலாளர்களிடம் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. பட்டுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கிளை தலைவர் வீரையன் தலைமை வகித்தார். மத்திய சங்கத் தலைவர் என்.சேகர், அனைத்திந்திய இளைஞர்பெருமென்ற மாவட்ட செயலாளர் காரல் மார்க்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
The post 16 அம்ச கோரிக்கைகளுக்கு தீர்வு காண போக்குவரத்து கழகம் கையெழுத்து இயக்கம் appeared first on Dinakaran.