×
Saravana Stores

நெடுந்தீவு அருகே மீன்பிடித்த தமிழ்நாடு மீனவர்கள் 4 பேர் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்!

புதுக்கோட்டை: தமிழ்நாடு மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்றது. கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை அவ்வப்போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்பை கைது செய்வது வாடிக்கையாக உள்ளது. மீன் பிடிதடைக்காலம் முடிந்து நேற்று முன் தினத்தில் இருந்து மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகிறார்கள். இதனிடையே புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து நேற்று 241 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். இந்நிலையில், நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டு இருந்த தமிழக மீனவர்கள் நான்கு பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 4 மீனவர்கள், ஒரு படகை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர். 4 பேரை விசாரணைக்காக இலங்கை காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு கொண்டு செல்கின்றனர். மேலும், இந்த 4 மீனவர்கள் மீது எல்லை தாண்டி வந்ததாக வழக்குப்பதிவு செய்து பிற்பகலுக்கு மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியிலும், தமிழ்நாடு மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post நெடுந்தீவு அருகே மீன்பிடித்த தமிழ்நாடு மீனவர்கள் 4 பேர் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Neduntivu ,Sri Lanka Navy ,Pudukkottai ,Nadu ,Sri Lankan Navy ,
× RELATED நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்...