×

காங்கயத்தில் அரசு பேருந்து-கார் மோதல்

 

காங்கயம், ஜூன் 18: காங்கயத்தில் கார் மீது அரசு பேருந்து மோதியதில் அதிர்ஷ்வசமாக பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர். ஈரோடு மாவட்டம், கோபி கிளையை சேர்ந்த 3207 எண் கொண்ட அரசு பேருந்து நேற்று மாலை திருச்சியில் இருந்து கோவைக்கு பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.

அப்போது காங்கயம் போலீஸ் நிலைய ரவுண்டாவில் சிக்னலை கண்டுகொள்ளாமல் சென்ற ஓட்டுனர் அரசு பேருந்தை ஓட்டியுள்ளார். இதனால் பின்னால் வந்த காரில் மோதியது. இதில் பயணிகளுக்கு பாதிப்பு ஏதும் இல்லை. அதிர்ஷ்வசமாக பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post காங்கயத்தில் அரசு பேருந்து-கார் மோதல் appeared first on Dinakaran.

Tags : Gangaim ,Kangayam ,Govt ,Erode district ,Gopi ,Trichy ,Coimbatore ,Gangayama ,Dinakaran ,
× RELATED காங்கயம் வட்ட சட்டப்பணிகள் குழு...