×

புழல் கதிர்வேடு பகுதியில் மழைநீர் கால்வாய் பணிக்கு பூமி பூஜை

புழல்: மாதவரம் மண்டலம், 31வது வார்டு, புழல் அடுத்த கதிர்வேடு கங்கை அம்மன் கோவில் குறுக்கு தெரு, பஜனை கோவில் தெரு, சௌமியா நகர் ஆகிய பகுதிகளில் மழைக்காலங்களில் மழை நீர் தெருக்கள் மற்றும் வீடுகளில் மழைநீர் சூழ்ந்து கொள்வதால், அப்பகுதி பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். இது குறித்து வார்டு கவுன்சிலர் சங்கீதா பாபுவிடம் மழை நீர் கால்வாய் அமைக்க கோரிக்கை வைத்தனர். கோரிக்கை ஏற்கப்பட்டு மாதவரம் மாநகராட்சி மண்டல அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதன் அடிப்படையில் நேற்று மழை நீர் கால்வாய் அமைப்பதற்கான பூமி பூஜை கதிர்வேடு சௌமியா நகரில் நடைபெற்றது. வார்டு கவுன்சிலர் சங்கீதா பாபு தலைமை தாங்கி பூமி பூஜைக்கான பணிகளை துவக்கி வைத்தார். இதில் மாநகராட்சி வார்டு உதவி பொறியாளர் லோகேஷ். சமூக ஆர்வலர் பாபு மற்றும் காங்கிரஸ் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். மழைநீர் கால்வாய் பணிகள் விரைந்து முடிக்கப்படும் என மாதவரம் மண்டல மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post புழல் கதிர்வேடு பகுதியில் மழைநீர் கால்வாய் பணிக்கு பூமி பூஜை appeared first on Dinakaran.

Tags : Bhoomi Pooja ,Puzhal Kathirvedu ,Puzhal ,Madhavaram Mandal ,31st Ward ,Kathirvedu Gangai Amman Kovil Cross Street ,Bhajanai Kovil Street ,Soumya Nagar ,Dinakaran ,
× RELATED அரசு பள்ளிகளில் மாணவர்கள் யோகா பயிற்சி