×

அரசு பள்ளிகளில் மாணவர்கள் யோகா பயிற்சி

புழல்: திருவள்ளூர் புழல் செங்குன்றம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் யோகா பயிற்சி நடைபெற்றது. இதில், ஏராளமான மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். சென்னை பிராட்வே பகுதியில் உள்ள பிரம்மா குமாரிகள் குழுவினர் சார்பில் புழல் பொப்பிலி ராஜா அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு நேற்று பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், பிரம்ம குமாரிகள் மையத்தைச் சேர்ந்த கீதா தலைமையில் யோகா பயிற்சியாளர்கள் ஜெயபால், தமிழரசி ஆகியோர் கலந்துகொண்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு உடல் மற்றும் மன நலனுக்கான யோகா பயிற்சிகளை அளித்தனர். இதில் பள்ளி தலைமை ஆசிரியர்(பொறுப்பு) கோபால்சாமி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பிரம்ம குமாரி மையத்தைச் சேர்ந்தவர்கள் பள்ளி மாணவ மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் செங்குன்றம் ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி செங்குன்றம் மகளிர் அரசு மேல்நிலைப்பள்ளி பம்மது குளம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கும் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் சாமிநாதன், அமுதா மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதே போல் திருவள்ளூர் ஆர்.எம். ஜெயின் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் யோகா பயிற்சி செய்து யோகா தினத்தை கொண்டாடினர்.

The post அரசு பள்ளிகளில் மாணவர்கள் யோகா பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Puzhal ,Tiruvallur Puzhal Sengunram ,Puzhal Poppili ,Brahma Kumaris ,Broadway ,Chennai ,
× RELATED புழல் சிறையில் போதை மாத்திரை கஞ்சா பறிமுதல் : 4 கைதிகள் மீது வழக்கு