×

மேம்பாலத்தில் உறுதிதன்மை பரிசோதனை

பெரம்பலூர், ஜூன் 15: பெரம்பலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிறுவாச்சூர் மேம்பாலத்தில் எடைதாங்கும் பரிசோதனை மேற்கொள்ளும் பணி மறு ஆய்வுக்கு உட் படுத்தப்பட்டு வருகிறது. ஆய்வுப்பணிகள் முடிந்த வுடன் அச்சமின்றி பயணிக்கலாம். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம் பலூர் அருகே உள்ள சிறு வாச்சூர் பகுதியில் சாலையைக் கடக்கும் விவசாயி கள், பொது மக்கள் ஆண் டுக்கு நான்கைந்துபேர் உயிரிழந்த பரிதாபம் நிகழ்ந்து வந்ததால், சிறு வாச்சூர் தேசிய நெடுஞ் சாலையில் உயர்மட்ட மேம் பாலம் அமைக்க வேண்டும் என இந்தியதேசிய நெடுஞ் சாலைத்துறை ஆணையத் திற்கு அரசியல் கட்சிகள், பொதுமக்கள், பல்வேறு விவசாய சங்கங்கள் சார் பாக வலியுறுத்தப்பட்டது. இதற்காக 2016 ஜூலை யில் மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை திட்ட இயக்குநர் சிறுவாச் சூருக்கு நேரில் வந்து இரு வழி உயர்மட்ட மேம்பாலம் அமையக்கோரும் இடத்தை பார்வையிட்டு, கள ஆய்வு செய்து அறிக்கையை அனுப்பி வைத்த பிறகு, இந்திய தேசிய நெடுஞ் சாலைத்துறை ஆணையம் சார்பாக ரூ.14 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த 2018 ஆம்ஆண்டு மே-மாதம் 14 ம்தேதி மேம் பாலம்கட்டுவதற்காக, அடிக் கல்நாட்டப் பட்டது. அடிக்கல் நாட்டப்பட்டதோடு கிடப்பில் போடப்பட்ட இந்த மேம்பால கட்டு மானப் பணிகள் 20 மாதங்களுக்கு பிறகுதான் மீண்டும் தொடங்கியது.

தொடங்கிய பணிகள் தொய்வின்றி நடத்தி முடிக் கப்படும் என எதிர்பார்த்த நிலையில், 2023 ஜனவரி மாதம் வரை நடக்கிறதா நிறுத்தப்பட்டுவிட்டதா என தெரியாமல்5ஆண்டுகளாக ஆமை வேகத்தைவிட குறைந்த வேகத்தில் நடந்து வந்தது. இதனால் சிறுவாச்சூரில்போக்குவரத்து ஸ்தம்பித்து அரைமணி நேரத் திற்கு ஒருமுறை நூற்றுக் கணக்கான வாகனங்கள் தேங்கி நிற்கும் அவலம் ஏற்பட்டது. சிறுவாச்சூர் மேம்பாலத்திற்கு பிறகு அறிவித்த சிறுகன்பூர் மேம் பால கட்டுமானப்பணிகள் முடிவடைந்து மேம்பாலம் பயன்பாட்டிற்கு வந்து, அதைவிட பெரம்பலூர் மாவட்டத்திலேயே, ஆலத் தூர், பாடாலூர் பகுதிகளில் மேம்பாலம் அமைத்திட தொடங்கிய பணிகளும் 50 சதவீதம் முடிவடைந்ததால் சிறுவாச்சூர் ஊர்க்காரர்களும், வாகன ஓட்டிகளும் அதிருப்தியின் உச்சத்தில் இருந்தனர். இதனால் 2013 ஜூன், ஜூலை மாதங்களில் மேம் பால கட் டுமானப் பணிகள் மீண்டும் நடந்தபோதும் சிறுவாச்சூர் மேம்பாலம் மழைக்கும் வெயிலுக்கும் தாக்குப் பிடிக்காமல் நீர்க் கசிவும், விரிசலும் ஏற்பட்டு, திறப்பு விழா காணும் முன் பாக மராமத்து பணிகளை மேற்கொள்ளும் நிலை ஏற் பட்டது. இதற்காக நீர்க் கசிவை தடுக்கும் தார்ப் பாய் பேஸ்டுகளை பாலத் தீன் உட்புறம் ஒட்டும் பணிகள் தீவிரமாக நடந்து வந்தது.மேலும் வெயிலுக்கு தாங்காமல் விரிசல் விட்ட இடங்களை சிமெண்டால் பூசி, அதுவும் வெளியே தெரியாதபடிக்கு தார்ப்பாய் பேஸ்ட் ஒட்டப்பட்டது. அதோடு பாலத்தின் உட் புறம் சிமெண்டு பூச்சுகள் உதிராதிருக்க இரும்பு பைப்புகளைக் கொண்டு தாங்கிப் பிடிக்கும் வகை யில் சீலிங்பகுதி மாற்றப் பட்டது.

இதனால் திறப்பு விழா காணும் முன்பாக, மேம் பாலத்தின் ஸ்திரத்தன்மையை ஆய்வு செய்த பிறகே திறக்க வேண்டுமென வலியுறுத்தி தினகரன் நாளிதழ் கடந்த செப்.13ம் தேதி வெளியிட்ட செய்தி யைப் பார்த்த கலெக்டர் கற்பகம், நேரில் ஆய்வு செய்தபிறகு, மேம்பாலத் தின் ஸ்திரத்தன்மையை உறுதிசெய்த பிறகே திறக்க வேண்டும் என உத்தரவிட்டார். இதனால் சுதாரிப்பான ஒப்பந்ததாரர் கள் சீரமைப்புப் பணிகளை துரிதப்படுத்தி கடந்த ஜன.1-ம் தேதி மேம்பாலத்தில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. 5 ஆண்டுகள் ஆமை வேகத்தில் நடந்து முடிந்த மேம்பாலத்தின் உறுதித்தன்மை குறித்து, ஜன 7ம்தேதி இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின், திருச்சி சரக திட்ட இயக்குநர் கணேஷ்குமார் முன்னிலை யில், புது டெல்லியைச் சேர்ந்த ஐஐடி பேராசிரியர் சேஷாங் பிஷ்னோய், திருச்சி டோல்வே பிரைவேட் லிமி டெட் திட்ட மேலாளர் துர்கா பிரஷாத் ரெட்டி, சிவில் இன்ஜினியர் சிவசங்கரன், நிர்வாக அலுவலர் பாஸ்கர் ஆகியோர் முன்னிலையில் நேரில் ஆய்வு செய்து ஆய்வறிக்கையை ஐதராபாத்தில் உள்ள இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய(லேப்) ஆய்வகத் திற்கு அனுப்பிவைத்தார்.

இதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக சிறுவாச்சூர் மேம்பாலத்தில் ஐதராபாத் ஆய்வ றிக்கை முடிவின்படி கனரக வாகனங்களை நிறுத்தி வைத்து எடைபரிசோதனை மேற்கொள்ளும் பணி மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக பாலத் தின் உட்புறம் இரும்பு ஆங்கில்கள் கொடுத்து சோத னைக் கருவிகள் பொருத்தி அதிக எடை கொண்ட வாக னங்கள் பாலத்தை கடக் கும்போதும், நிறுத்தி வைக் கும் போதும் அதிர்வுகள் விரிசல்கள் ஏற்படுகிறதா என மறு ஆய்வு பணிகள் நடைபெற்றன. இதற்காக வடக்கு தெற்காக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு பகுதி மட்டும் போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து திருச்சி டோல்வே அதிகாரி ஒருவ ரிடம் கேட்டபோது, புது டெல்லி பேராசிரியர் ஆய் வறிக்கையின்படி இறுதிக் கட்ட மறுஆய்வு பணிகள் நடத்தப்பட்டு வருகிறது. மேம் பாலத்தின் ஸ்திரத் தன்மை உறுதி செய்யப் பட்டுவிட்டால், இனி வாகன ஓட்டிகள் அச்சமின்றி பய ணிக்கலாம் எனத் தெரிவித்தார்.

The post மேம்பாலத்தில் உறுதிதன்மை பரிசோதனை appeared first on Dinakaran.

Tags : PERAMBALUR ,URUACHUR ,Peram Balur ,Tiruchi-Chennai National Highway ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட தாலுகாக்களில்...