- தஞ்சாவூர்
- கொத்தங்குடி ஊராட்சி
- பாபநாசம் தாலுக்
- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அம்மாபேட்டை ஒன்றியம்
- உத்தரமங்கலம்
- எடக்குடி கிராமம்
- கால்நடை துறை
- கோமரி தடுப்பூசி
- தின மலர்
தஞ்சாவூர், ஜூன் 16: பாபநாசம் தாலுக்கா கொத்தங்குடி ஊராட்சியில் கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அம்மாபேட்டை ஒன்றியம், கொத்தங்குடி ஊராட்சி, உதாரமங்கலம் மற்றும் எடக்குடி கிராமத்தில் கால்நடை மருத்துவத் துறை சார்பில் கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமை கொத்தங்குடி ஊராட்சி மன்ற தலைவர் பழனி தொடங்கி வைத்தார்.
கால்நடை உதவி மருத்துவர் ரகுநாத் தலைமையிலான மருத்துவ குழுவினர் கால்நடைகளுக்கு கோமாரி நோய்க்கான தடுப்பூசி செலுத்தினர். ஆய்வாளர் ராமசந்திரன் உடன் இருந்தார். முகாமில் பூங்கனூர் குட்டை இன மாடுகள், ஹரியானா மாநில நாட்டு இன மாடுகள் மற்றும் களப்பின மாடுகள் என 200 க்கும் மேற்பட்ட மாடுகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. முகாம் ஏற்பாடுகளை கால்நடை பராமரிப்புத் துறையினர் மற்றும் ஊராட்சி நிர்வாகிகள் செய்து இருந்தனர்.
The post கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி முகாம் appeared first on Dinakaran.