- உலக இரத்த தானம் நாள்
- பொன்னமராவதி
- Ponnamaravati
- பொன்னமராவதி துர்கா ஹாஸ்பிடல்
- துர்கா நர்சிங் காலெஜ்
- அமலா அண்ணாய் செகண்டரி பள்ளி
- உலக இரத்த தானம் தினம் விழிப்புண
- தின மலர்
பொன்னமராவதி, ஜூன் 16: பொன்னமராவதியில் உலக ரத்த கொடையாளர் தின விழிப்புணர;வு பேரணி நடைபெற்றது. உலக ரத்த கொடையாளர் தினத்தையொட்டி பொன்னமராவதி துர்க்கா மருத்துவமனை, துர்க்கா செவிலியர் கல்லூரி மற்றும் அமல அன்னை மேல்நிலைப்பள்ளி ஆகியவை இணைந்து நடத்திய பேரணியை பொன்னமராவதி வர்த்தகர் கழகத்தலைவர் பழனியப்பன் தொடங்கி வைத்தார்.
சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பெருமாள், மருத்துவர் செல்வக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமல அன்னை மெட்ரிக் பள்ளியின் துணை முதல்வர் பிரின்ஸ் ரத்த தானம் குறித்த விழிப்புணர்வு உரையாற்றினார். புதுப்பட்டி சேங்கை ஊரணி அருகே தொடங்கிய பேரணி மேலரத வீதி, அண்ணாசாலை, பேருந்துநிலையம் வழியாக வந்து காவல் நிலையம் அருகே நிறைவுற்றது.
பேரணியில் பங்கேற்றோர் ரத்ததானம் செய்வோம் உயிர்களை காப்போம், உதிரம் கொடை, உயிர்க்கொடை என்பன உள்ளிட்ட பல்வேறு ரத்த தான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தியும், முழக்கமிட்டும் சென்றனர். முன்னதாக ரத்த தானம் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. துர்க்கா செவிலியர் கல்லூரி முதல்வர் பாண்டியராஜன், மேலாளர் வெள்ளைச்சாமி, ஆய்வக நுட்பனர் ஆறுமுகம் மற்றும் துர்க்கா செவிலியர் கல்லூரி மாணவிகள், அமல அன்னை மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
The post பொன்னமராவதியில் உலக ரத்த கொடையாளர் தின விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.