×

சென்னை மாநகருக்கு 11 மாதங்களுக்கு குடிநீர் பிரச்னை ஏற்படாது: நீர்வளத்துறை அதிகாரி தகவல்

சென்னை: வடகிழக்கு பருவமழையால் சென்னை மாநகரின் குடிநீர் தேவைக்கு 11 மாதங்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது என்று நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்த நிலையில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உட்பட பல்ேவறு மாவட்டப்பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்த மழை காரணமாக சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், கண்ணன் கோட்டை ஆகிய 5 ஏரிகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. குறிப்பாக, 3300 மில்லியன் கன அடி கொண்ட புழல் ஏரியில் 3706 மில்லியன் கன அடியாகவும் 1081 மில்லியன் கன அடி கொண்ட சோழவரம் ஏரியில் 881 மில்லியன் கன அடி உள்ளது. 3645 மில்லியன் கன அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 3318 மில்லியன் கன அடியாகவும், 3231 மில்லியன் கன அடி கொண்ட பூண்டி ஏரியில் 3058 மில்லியன் கன அடியாகவும், 500 மில்லியன் கன அடி கொண்ட கண்ணன் கோட்டையில் 500 மில்லியன் கன அடியாக நீர்  இருப்பு உள்ளது. தற்போது, வரை 5 ஏரிகளில் மொத்தம் 10833 மில்லியன் கன அடி அதாவது 10.83 டிஎம்சி நீர் மட்டம் உயர்ந்தது. இந்த நிலையில் சென்னை மாநகரை பொறுத்தவரையில் ஒரு மாதத்துக்கு ஒரு டிஎம்சி குடிநீர் தேவைப்படுகிறது. தற்போது, 10.83 டிஎம்சி உள்ள நிலையில் 11 மாதத்துக்கு குடிநீர் பிரச்னை இருக்காது. எனவே, அடுத்தாண்டு வடகிழக்கு பருவமழை வரை குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் என்பதால் வரும் ஆண்டில் எந்தவித சிக்கலும் இருக்காது என்று நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்….

The post சென்னை மாநகருக்கு 11 மாதங்களுக்கு குடிநீர் பிரச்னை ஏற்படாது: நீர்வளத்துறை அதிகாரி தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Water Resources Officer ,Dinakaran ,
× RELATED சென்னை – கன்னியாகுமரி அதிவிரைவு ரயிலுக்குள் மழைநீர்