தஞ்சாவூர், ஜூன் 15: திருவையாறு காவிரி ஆற்றில் இன்று காவிரி தாய்க்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுவதையொட்டி நேற்று காவிரி ஆற்றுப் பகுதியில் விவசாயிகள் தூய்மை பணி மேற்கொண்டனர்.காவிரி டெல்டா பாசனத்திற்காக ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு குறிப்பிட்ட தேதியில் மேட்டூர் அணை திறந்து விடப்படவில்லை.
இந்த நிலையில் காவிரி தாய் இயற்கை வழி, வேளாண் உழவர் நடுவம் மற்றும் தஞ்சாவூர் ஒருங்கிணைந்த நெற்களஞ்சிய பகுதி அனைத்து உழவர் அமைப்புகள் சார்பில் இன்று ( சனிக்கிழமை) தஞ்சாவூர் அருகே திருவையாறு காவிரி ஆற்றினுள் காவிரித்தாய் உருவப்படத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து காவிரிநீர் வர வேண்டி வழிபாடு நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு திருவையாறு ஆற்று பகுதியை தூய்மை செய்யும்பணி நடைபெற்றது.
ஆற்றில் இருந்த முட்புதர்கள், குப்பைகள் அகற்றப்பட்டன. இந்தப் பணியில் காவிரித்தாய் இயற்கை வழி வேளாண் உழவர் நடுவம் நிறுவனத் தலைவர் அரு சீர். தங்கராசு, அவைத்தலைவர் சுந்தரிஆனந்தன், ஒருங்கிணைப்பாளர் பசுபதி, காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் ரவிச்சந்திரன், தமிழக மக்கள் வாழ்வுரிமை இயக்க நிறுவன தலைவர் ரவிச்சந்திரன், பொதுச் செயலாளர் பொய்யாமொழி, நகர செயலாளர் ரவி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
The post தரிசாக கிடக்கும் ஆற்றுப்பாசன வயல்கள் இன்று காவிரிதாய்க்கு சிறப்புபூஜை திருவையாறு காவிரி ஆற்றில் விவசாயிகள் தூய்மைப்பணி appeared first on Dinakaran.