ஸ்ரீவில்லிபுத்தூர் ஜூலை 15: ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி சார்பில் ஆண்டாள் கோயில் கோபுரம் அமைந்துள்ள பகுதி மற்றும் கோயிலைச் சுற்றி உள்ள பகுதிகளில் புதிதாக தார்சாலைகள் அமைக்கப்படுவதால் பக்தர்கள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரம் மற்றும் சுற்றுவட்ட பகுதிகளில் சில மாதங்களுக்கு முன்பே புதிய தார்ச் சாலைகள் அமைக்க நகராட்சி கூட்டத்தில், நகராட்சி தலைவர் தங்கம் ரவிக்கண்ணன் தலைமையில் முடிவு செய்யப்பட்டது.
இதற்கிடையே நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு காரணமாக தேர்தல் விதி நடைமுறைகள் அமலுக்கு வந்ததால் நலத்திட்டப் பணிகளை மேற்கொள்ள இயலாத நிலை ஏற்பட்டது. தற்போது நடத்தை விதிமுறைகள் விலக்கிக் கொள்ளப்பட்டதால் தற்போது புதிதாக சாலை அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கான பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டாள் கோயிலை சுற்றி உள்ள பகுதிகளில் பல ஆண்டுகளுக்கு பிறகு புதிதாக தார் சாலைகள் அமைக்கப்பட்டு வருவதால் பக்தர்கள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
The post ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோயில் பகுதிகளில் புதிய தார் சாலை அமைப்பு பொதுமக்கள், பக்தர்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.