- நெல்
- பாபநாசம்
- தஞ்சாவூர்
- கிட்டங்கநாட்டம் ஊராட்சி
- தேவராயன்பெட்
- பாபநாசம் தாலுக்கா
- நெல் அறுவடை கிடங்கு
- தின மலர்
தஞ்சாவூ, ஜூன் 14: பாபநாசம் தாலுகா தேவராயன்பேட்டை அருகே உள்ள கிடங்காநத்தம் அரசு நேரடிநெல் கொள்முதல் நிலைய கிடங்கு ஷட்டர் வசதி இருந்தும் பூட்டப்படாமல் உள்ளதால் சிலர் மதுபானம் அருந்தும் பார் ஆக பயன்படுத்தி வருகின்றனர். உடனடியாக நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா தேவராயன்பேட்டை அருகே கிடங்காநத்தம் பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது.
அந்த பகுதியில் இன்னும் அறுவடை பணிகள் தொடங்காததால் அந்த நெல் கொள்முதல் நிலையமானது தற்போது செயல்பாட்டில் இல்லாமல் உள்ளது. இந்த நிலையில் அந்த நெல் கொள்முதல் நிலையம் நுழைவாயிலில் ஷட்டர் வசதி உள்ளது. ஆனால் கொள்முதல் நிலையத்தை ஷட்டர் போட்டு மூடாததால் இந்த பகுதியில் உள்ள மது பிரியர்கள் அங்கு மது அருந்துவதும், பாட்டில்களை உடைப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது.
எனவே அந்த வழியை கடக்கும்போது பொதுமக்கள் மிகவும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இந்த நிலையில் கிடங்காநத்தம் அரசு நேரடிநெல் கொள்முதல் நிலைய கிடங்கை ஷட்டர் போட்டு மூட வேண்டும் எனவும், மது அருந்துவர்கள் மீது துறை ரீதியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post பாபநாசம் அருகே மது அருந்தும் பாராக மாறிய நெல்கொள்முதல் கிடங்கு appeared first on Dinakaran.