×

கீழ்வேளூர் பகுதியில் மின்விநியோகம் நாளை நிறுத்தம்

 

கீழ்வேளூர், ஜூன் 14: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக நாகை உதவி செயற்பொறியாளர் (தெற்கு) ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: நாகை மாவட்டம் கீழ்வேளூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (15ம்தேதி) நடைபெறுகிறது.

இதையொட்டி துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் கீழ்வேளூர், ஒதியத்ததூர், கடம்பங்குடி, ஓர்குடி, கோகூர், ஆனைமங்கலம், அகரகடம்பனூர், ஆழியூர், புலியூர், வடக்காலத்தூர், பட்டமங்கலம், இலுப்பூர், ராதாமங்கலம், தேவூர் ஆகிய பகுதிகளில் நாளை (15ம்தேதி) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post கீழ்வேளூர் பகுதியில் மின்விநியோகம் நாளை நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Kilvellur ,Tamil Nadu Power Generation and Distribution Corporation ,Nagai ,Assistant ,Executive Engineer ,South) Rajendran ,Nagai district ,
× RELATED பெரம்பலூரில் 11ம் தேதி மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்