- இந்தியா
- பாக்கிஸ்தான்
- டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட்
- சிவசேனா
- மும்பை
- உதாவ்
- மோடி
- ஜம்மு மற்றும்
- காஷ்மீர்
- டி-20 உலகக்கோப்பை துடுப்பாட்ட
- தின மலர்
மும்பை: தீவிரவாத தாக்குதல்களை கருத்தில் கொண்டு டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் போட்டியை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு சிவசேனா (உத்தவ்) வலியுறுத்தி உள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடந்து வரும் தீவிரவாத தாக்குதல் சம்பவங்களை கருத்தில் கொண்டு நடந்து வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா -பாகிஸ்தான் போட்டியிடுவதை ரத்து செய்ய வேண்டும் என்று சிவசேனா(உத்தவ்)வலியுறுத்தி உள்ளது.
இது குறித்து சிவசேனா (உத்தவ்) செய்தி தொடர்பாளர் ஆனந்த் துபே பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா , ஒன்றிய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் மற்றும் இந்தயி கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்துக்கு கடிதம் எழுதி இருக்கிறார். இதில் ,‘‘வன்முறை காரணமாக பாகிஸ்தானுடனான கிரிக்கெட் போட்டியை இந்தியா ரத்து செய்ய வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.
The post டி-20 உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா-பாக். போட்டியை ரத்து செய்ய வேண்டும்: சிவசேனா வலியுறுத்தல் appeared first on Dinakaran.