×
Saravana Stores

வரும் ஜனவரி 23க்குள் நேதாஜியின் அஸ்தியை கொண்டு வர வேண்டும்: பிரதமருக்கு கடிதம்

கொல்கத்தா: கொல்கத்தாவில் வசிக்கும் நேதாஜி சுபாஷ் சந்திர போசின் பேரன் சந்திரகுமார் போஸ் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், ‘இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடிய நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் கடந்த 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 18ம் தேதி வீரமரணம் அடைந்தார். அவரது அஸ்தி ஜப்பானில் உள்ள ரெங்கோஜி கோயிலில் வைக்கப்பட்டுள்ளது. இவ்வளவு ஆண்டுகள் ஆகியும் நேதாஜியின் அஸ்தி, இந்தியாவுக்கு கொண்டு வரப்டபடாதது அவருக்கு செய்யும் மிகப்பெரிய அவமரியாதை. எனவே நேதாஜியின் பிறந்தநாளான வரும் ஜனவரி 23ம் தேதிக்குள் அவரது அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், டெல்லியில் உள்ள கடமைப் பாதையில் அவருக்கு நினைவகம் கட்ட வேண்டும்’ என வலியுறுத்தி உள்ளார். கடந்த ஆகஸ்ட் 17ம் தேதியும் சந்திர போஸ் இதே கோரிக்கையை பிரதமர் மோடியிடம் விடுத்தது குறிப்பிடத்தக்கது.

The post வரும் ஜனவரி 23க்குள் நேதாஜியின் அஸ்தியை கொண்டு வர வேண்டும்: பிரதமருக்கு கடிதம் appeared first on Dinakaran.

Tags : PM ,Kolkata ,Netaji Subhash Chandra Bose ,Chandrakumar Bose ,Modi ,India ,Netaji ,
× RELATED நிர்வாக காரணத்தால் 4 விமானங்கள் ரத்து: பயணிகள் கடும் அவதி