×

குவைத்தில் தீ விபத்தில் இந்தியர்கள் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது: கமல்ஹாசன்

சென்னை: குவைத் தீ விபத்தில் இந்தியர்கள் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவத்துக்கு ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; குவைத் நாட்டின் மங்கஃப் நகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் நேரிட்ட தீ விபத்தில் இந்தியர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இக்கொடிய விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுவோர் விரைவில் குணமடைய விழைகிறேன். பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யவும், உயிரிழந்தோர் உடல்களை தாய் நாட்டுக்குக் கொண்டுவரவும் மத்திய வெளியுறவுத் துறை துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post குவைத்தில் தீ விபத்தில் இந்தியர்கள் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது: கமல்ஹாசன் appeared first on Dinakaran.

Tags : Indians ,Kuwait ,Kamal Haasan ,CHENNAI ,Kuwaiti ,President ,X site ,Mangaf, Kuwait ,
× RELATED குவைத் தீ விபத்தில் செஞ்சி இளைஞரின்...