×

மருமகனுடன் தகாத உறவு வைத்த பெண் கழுத்தை அறுத்து கொலை


கிருஷ்ணகிரி: மருமகனுடன் கள்ளத்தொடர்பு வைத்த பெண் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார்.கிருஷ்ணகிரி மாவட்டம், மோட்டுகொல்லகொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி(40), கூலித்தொழிலாளி. இவரது மனைவி சத்யா(36). இவர்களுக்கு 18, 16 வயதுகளில் 2 மகன்கள் உள்ளனர். பழனியின் வீட்டில் அவரது அக்கா மகன் மாரியப்பன் (25) சில மாதங்களுக்கு முன் தங்கி பேக்கரியில் வேலைக்கு சென்று வந்தார்.

அப்போது, அவருக்கும், சத்யாவிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு தகாத உறவாக மாறியது. மருமகனுடன் உள்ள தொடர்பை கைவிடும்படி கூறி, பழனி மற்றும் அவரது மகன்கள் சத்யாவை கண்டித்தனர். ஆனாலும், அவர் விடவில்லை. நேற்று காலை பழனி வேலைக்கு சென்று விட்டார். அவரது மகன்களும் வெளியே சென்று விட்டனர். பிற்பகலில் வீட்டில் சத்யாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி சென்று பார்த்தனர். அப்போது, கட்டிலில் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் சத்யா பிணமாக கிடந்தார். அருகில் மாரியப்பனும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

தகவலறிந்து வந்த காவேரிப்பட்டணம் போலீசார் அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பழனி மற்றும் அவரது மகன்கள் வீட்டில் இல்லாத நேரத்தில், மாரியப்பன் வந்து சத்யாவுடன் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. அந்த நேரம் அங்கு வந்த பழனி, மனைவியை கொலை செய்துவிட்டு, மருமகன் கழுத்தையும் அறுத்தாரா? அல்லது மாரியப்பனே சத்யாவின் கழுத்தை அறுத்துக் கொலை செய்து விட்டு, தானும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post மருமகனுடன் தகாத உறவு வைத்த பெண் கழுத்தை அறுத்து கொலை appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Palani ,Mottukollakottai ,Krishnagiri district ,Satya ,
× RELATED உழவர் சந்தையில் காய்கறிகள் விலை உயர்வு