×
Saravana Stores

குவைத் தீவிபத்தில் தமிழர்கள் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: குவைத் தீவிபத்தில் தமிழர்கள் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும் என அயலகத் தமிழர் நலத்துறைக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். குவைத்தில் 7 மாடிக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 40 இந்தியர்கள் உட்பட 53 பேர் உயிரிழந்துள்ளனர். தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலைகளை விரைந்து இந்தியா கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது. இதற்காக குவைத் விரைந்தார் இந்திய வெளியுறவு இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங். இந்நிலையில் குவைத் தீ விபத்து தொடர்பான விவரங்களைப் பெற அயலக தமிழர் நலத்துறையை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவிற்குள் எனில் +91 1800 3093793, வெளிநாடு எனில் +91 80 6900 9900 மற்றும் +91 80 6900 9901 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் குவைத் தீவிபத்தில் தமிழர்கள் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும் என அயலகத் தமிழர் நலத்துறைக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். குவைத் தீவிபத்தில் சிக்கிய தமிழர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் கிடைக்க குவைத் இந்திய தூதரகம் மற்றும் அங்குள்ள தமிழ் அமைப்புகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

The post குவைத் தீவிபத்தில் தமிழர்கள் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tamils ,Kuwaiti Peninsula ,Chief MLA ,K. Stalin ,Chennai ,Chief Minister ,MLA ,Tamil Welfare Department ,Kuwait ,Indians ,Chief MLA K. Stalin ,
× RELATED தமிழர்களுக்கான உரிமைகளை வென்றெடுக்க வேண்டும்: ராமதாஸ்