×

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் தமிழிசை சவுந்தரராஜனிடம் அதிருப்தியை வெளிப்படுத்திய அமித் ஷா

அமராவதி: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் தமிழிசை சவுந்தரராஜனிடம் அதிருப்தியை அமித் ஷா வெளிப்படுத்தியுள்ளார். மேடையில் வணக்கம் கூறிவிட்டு சென்ற தமிழிசையை அழைத்து அமித் ஷா கண்டிப்புடன் பேசினார். சமாதானப்படுத்துவது போல் தமிழிசை விளக்கம் அளித்தாலும் அதனை ஏற்க மறுத்து அமித் ஷா கோபத்தை வெளிப்படுத்தினார். மக்களவை தேர்தல் தோல்வி தொடர்பாக தமிழ்நாடு பாஜகவில் அண்ணாமலை ஆதரவாளர்கள் மற்றும் தமிழிசை ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. தமிழ்நாடு பாஜகவில் உட்கட்சி பூசல் அதிகரித்து வரும் நிலையில் அமித் ஷா அதிருப்தி வெளிப்படுத்தியதால் பரபரப்பு நிலவியுள்ளது. தமிழ்நாடு பாஜக உட்கட்சி பூசல் தொடர்பாக கட்சியின் தமிழ்நாடு பொறுப்பாளர் பியூஸ் கோயல் ஏற்கனவே அறிக்கை கேட்டுள்ளார்.

The post ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் தமிழிசை சவுந்தரராஜனிடம் அதிருப்தியை வெளிப்படுத்திய அமித் ஷா appeared first on Dinakaran.

Tags : Amit Shah ,Tamilisai Soundararajan ,Andhra Chief Minister ,Chandrababu Naidu ,Amaravati ,Tamilisai ,
× RELATED ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு...