×

பீன்ஸ் விலை கடும் உயர்வு கிலோ ₹100க்கு விற்பனை

ஓசூர், ஜூன் 12: ஓசூர் உழவர்சந்தை மற்றும் வெளி மார்க்கெட்டுகளில் பீன்ஸ் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. வெளி மார்க்கெட்டுகளில் நேற்று 1 கிலோ பீன்ஸ் ₹100க்கு விற்பனையானது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு உழவர்சந்தையில் 1 கிலோ பீன்ஸ் ₹30க்கும், சில்லறை மார்க்கெட்டுகளில் ₹45க்கும் விற்பனையான நிலையில், தற்போது விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், தற்போது கோடை தொடங்கியிருப்பதால், ஆழ்துளை கிணறுகள் பெரும்பாலானவை வற்றி காணப்படுகின்றன. போதிய நீர் இன்றி, பீன்ஸ் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் விலை அதிகரித்துள்ளது. இன்னும் சில மாதங்களுக்கு பீன்ஸ் விலை குறைய வாய்ப்பில்லை, என்றனர்.

The post பீன்ஸ் விலை கடும் உயர்வு கிலோ ₹100க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Hosur ,Hosur Farmers Market ,
× RELATED ஓசூர் அருகே குடிநீர் குடித்த 25 பேருக்கு வாந்தி, மயக்கம்..!!