×

மாயமான முதியவர் சடலமாக மீட்பு

கிருஷ்ணகிரி, ஜூன் 19: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நந்திமங்களம் பகுதியைச் சேர்ந்தவர் ராமப்பா(70). இவர், வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லிக் கொள்ளாமல் அடிக்கடி வெளியூரில் உள்ள உறவினர்களை பார்க்க சென்று விடுவார். இதேபோல், கடந்த 14ம் தேதி வெளியே சென்ற ராமப்பா வீடு திரும்பவில்லை. வழக்கம்போல் உறவினர்கள் வீட்டுக்கு சென்றிருக்கலாம் என குடும்பத்தினர் நினைத்திருந்தனர்.

இதனிடையே, கிருஷ்ணகிரி டேம் மான் பண்ணை அருகே உள்ள கால்வாயில் முதியவரின் சடலம் கிடப்பதாக டேம் போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் சம்பவ இடம் சென்று விசாரித்தனர். இதில், சடலமாக கிடப்பது மாயமான ராமப்பா என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து அவர் கால்வாயில் தவறி விழுந்ததில் உயிரிழந்தாரா? அல்லது வேறு எதுவும் காரணமா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post மாயமான முதியவர் சடலமாக மீட்பு appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Ramappa ,Hosur Nandimangalam ,Krishnagiri district ,Dinakaran ,
× RELATED கற்கள் கடத்திய வாகனம் பறிமுதல்