×

பெட்ரோலுக்கு பணம் கேட்ட பங்க் ஊழியர் மீது தாக்குதல்

தேன்கனிக்கோட்டை, ஜூன் 19: தளி அருகே டூவீலருக்கு போட்ட பெட்ரோலுக்கு பணம் கேட்ட பங்க் ஊழியரை தாக்கிய வாலிபரை போலீசார் நேற்று கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே கக்கதாசம் திருமாளிகை கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார்(18). இவர், அங்குள்ள ஒரு பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், அருகில் உள்ள பாளையம் கிராமத்தை சேர்ந்த மோகன்(27) என்பவர், கடந்த 16ம் தேதி இரவு பங்க்கிற்கு வந்து, தனது டூவீலருக்கு பெட்ரோல் போட்டுள்ளார். ஆனால் அதற்கு பணம் கொடுக்க மோகன் மறுத்துள்ளார். இதனால் சிவக்குமார் பணம் கேட்டு மோகனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, ஆத்திரமடைந்த மோகன், பங்க் ஊழியர் சிவக்குமாரை சரமாரியாக தாக்கியதுடன், கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த சிவக்குமார் அளித்த புகாரின் பேரில், தளி போலீசார் வழக்குபதிந்து விசாரித்து மோகனை நேற்று கைது செய்தனர்.

The post பெட்ரோலுக்கு பணம் கேட்ட பங்க் ஊழியர் மீது தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : Dhenkanikottai ,Thali ,Sivakumar ,Kakkadasam Thirumalikai village ,Krishnagiri district ,
× RELATED காரில் சென்றவரை துரத்தி பிடித்தனர்...