×

நள்ளிரவில் வீடு புகுந்து 4.5 பவுன் நகை திருட்டு

தேன்கனிக்கோட்டை, ஜூன் 18: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த அஞ்செட்டி சேலத்து மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முனேஷ்(50). இவர் மரியாளம் கிராமத்தில் பால் பண்ணை நடத்தி வருகிறார். இவரது மனைவி சுஜாதா(45). கணவன், மனைவி இருவரும், நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டு விட்டு, வீட்டின் முதல் தளத்தில் உள்ள அறைக்கு தூங்கச் சென்றுள்ளனர். நேறறு காலை எழுந்து வந்த போது, தரைத்தளத்தில் உள்ள வீட்டின் கதவை உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும், உள் அறையில் பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த 4.5 பவுன் நகை திருடு போயிருந்தது. இதுகுறித்து முனேஷ் அஞ்செட்டி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நள்ளிரவில் வீடு புகுந்து 4.5 பவுன் நகை திருட்டு appeared first on Dinakaran.

Tags : Dhenkanikottai ,Munesh ,Anchetty Salettu Mariamman Koil Street, Krishnagiri District ,Marialam village ,Sujata ,
× RELATED மாடுகளை திருடிய வழக்கில் 3 பேர் கைது