×

ஆசிரியர் பயிற்சி தேர்வு தனித்தேர்வருக்கு ஹால்டிக்கெட்

சென்னை: தமிழ்நாட்டில் இயங்கும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் தொடக்க கல்வி பட்டயப் படிப்பு படித்து வரும் மாணவ, மாணவியருக்கான முதலாண்டு தேர்வு வரும் 21ம் தேதி தொடங்கி ஜூலை 9ம் தேதி வரையும், இரண்டாம் ஆண்டுக்கான தேர்வுகள் வரும் 20ம் தேதி தொடங்கி ஜூலை 8ம் தேதி வரையும் நடக்கிறது.

இந்த இரண்டு தேர்வுகளில் பங்கேற்க விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள் (தக்கல் உள்பட) www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் தங்களின் விண்ணப்ப எண், பிறந்த தேதி விவரங்களை உள்ளீடு செய்து இன்று பிற்பகலுக்கு பிறகு ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

The post ஆசிரியர் பயிற்சி தேர்வு தனித்தேர்வருக்கு ஹால்டிக்கெட் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED சரக்கு போக்குவரத்தை ஒருங்கிணைக்க...