×

குரூப் 4 தேர்வுகளில் குளறுபடி மறுதேர்வு நடத்த ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டை பொறுத்தவரை குரூப் 4 தேர்வு தான் மிகப்பெரிய தேர்வு. இந்த தேர்வை நடத்த 50 ஆயிரத்திற்கும் கூடுதலான பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். அவர்களுக்கு முழுமையான பயிற்சி அளிக்கப்படாதது தான் நிகழ்ந்த குழப்பங்களுக்கு காரணம். தமிழ்நாடு முழுவதும் 15 லட்சம் பேர் பங்கேற்கும் தேர்வை நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை அரசுப் பணியாளர் தேர்வாணையம் திட்டமிட்டு செய்திருக்க வேண்டும்.

இந்த குளறுபடிகளுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தான் முழு பொறுப்பேற்க வேண்டும். டி.என்.பி.எஸ்.சி நான்காம் தொகுதி தேர்வுகளில் நடந்த குளறுபடிகள் குறித்து முழுமையான விசாரணை நடத்த தமிழக அரசுக்கு ஆணையிட வேண்டும். தேர்வர்கள் அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்கும் நோக்குடன் ஜூன் 9ம் தேதி நடத்தப்பட்ட தேர்வை ரத்து செய்து விட்டு, விதிமுறைகளை முழுமையாக பின்பற்றி மறு தேர்வு நடத்துவதற்கும் தேர்வாணையத்திற்கு அரசு ஆணையிட வேண்டும்.

The post குரூப் 4 தேர்வுகளில் குளறுபடி மறுதேர்வு நடத்த ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Ramadas ,CHENNAI ,BAMA ,Ramadoss ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED போக்குவரத்து கழகங்களுக்கு...