×

துப்பாக்கி வாங்கிய வழக்கில் அமெரிக்க அதிபர் மகன் குற்றவாளி

வில்மிங்டன்: கடந்த 2018ம் ஆண்டில் துப்பாக்கிய வாங்கியது தொடர்பாக அமெரிக்க அதிபர் பைடன் மகன் ஹண்டர் பைடன் மீது 3 குற்றங்கள் சுமத்தப்பட்டன. அவர் கட்டாய துப்பாக்கி வாங்கும் படிவத்தை பயன்படுத்தாமல் துப்பாக்கி வாங்கியதாகவும், அந்த துப்பாக்கியைசட்டவிரோதமாக 11 நாட்கள் வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மேரிலென் நோரிகா, அமெரிக்கஅதிபர் பைடனின் மகன் ஹண்டர் பைடன்குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் அதிகபட்சமாக அவருக்கு 25 ஆண்டுகள் வரை சிறைதண்டனை விதிக்கப்படலாம். அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில் ஹண்டர் பைடன் வழக்கு மீது வந்துள்ள இந்த தீர்ப்பு அதிபர் பைடனுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

The post துப்பாக்கி வாங்கிய வழக்கில் அமெரிக்க அதிபர் மகன் குற்றவாளி appeared first on Dinakaran.

Tags : US ,Wilmington ,President ,Biden ,Hunter Biden ,
× RELATED இத்தாலியில் நடைபெறும் ஜி-7 மாநாட்டில்...