×
Saravana Stores

விமான விபத்தில் கிழக்கு ஆப்பிரிக்க நாடான மலாவியின் துணை அதிபர் சவ்லோஸ் சிலிமா(51) உட்பட அவருடன் பயணித்த 10 பேர் உயிரிழப்பு!

லிலொங்வே: விமான விபத்தில் கிழக்கு ஆப்பிரிக்க நாடான மலாவியின் துணை அதிபர் சவ்லோஸ் சிலிமா(51) உட்பட அவருடன் பயணித்த 10 பேர் உயிரிழந்தனர். மோசமான வானிலை காரணமாக விமானம் வனப்பகுதியில் விழுந்து நொறுங்கியுள்ளது.

கிழக்கு ஆப்பிரிக்கா நாடான மலாவி நாட்டின் துணை அதிபர் சவ்லோஸ் சிலிமா. 51 வயதான துணை அதிபர் சவ்லோஸ் சிலிமா 10 பேருடன் ராணுவ விமானத்தில் தலைநகர் லிலொங்வேயில் இருந்து சுமார் 370 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மசுஸு சர்வதேச விமான நிலையத்துக்கு புறப்பட்டார். அவர் பயணித்த ராணுவ விமானம் லிலொங்வேயில் இருந்து 45 நிமிடங்களில் மசுஸு விமான நிலையத்தில் அடைய வேண்டிய நிலையில் மாயமானது.

விமானத்துடனான தொடர்பினை விமான கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் இழந்துள்ளனர். இதையடுத்து மலாவி நாட்டு அதிபர் லாசரஸ் சக்வேரா தேடுதல் பணியை துரிதமாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். ரேடாருக்கு வெளியில் சென்ற விமானத்துடனான தொடர்பை பெற அணைத்து வகையிலும் முயற்சித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்ந்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் உதவியுடன் தேடுதல் பணிகள் நடந்து வந்தன. இந்தநிலையில் தான் சிகன்காவா மலைப்பகுதியில் விமானம் நொறுங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் பயணித்த கிழக்கு ஆப்பிரிக்க நாடான மலாவியின் துணை அதிபர் சவ்லோஸ் சிலிமா(51) உட்பட அவருடன் பயணித்த 10 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். மோசமான வானிலை காரணமாக விமானம் வனப்பகுதியில் விழுந்து நொறுங்கியுள்ளது.

மேலும் இது தொடர்பாக மனவி அதிபர் லாசரஸ் சக்வேரா தெரிவித்துள்ளதாவது; “இந்தச் செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் வருத்தப்படுகிறேன். துணை அதிபர் சவ்லோஸ் சிலிமா பயணித்த ராணுவ விமானம் கண்டுபிடிக்கப்பட்டது. விமானம் காடுகளில் விழுந்து நொறுங்கியதில் விமானத்தில் பயணித்த யாரும் உயிர் பிழைக்கவில்லை. இது பெரும் சோகம் ” என தெரிவித்தார்.

The post விமான விபத்தில் கிழக்கு ஆப்பிரிக்க நாடான மலாவியின் துணை அதிபர் சவ்லோஸ் சிலிமா(51) உட்பட அவருடன் பயணித்த 10 பேர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Tags : Vice President of Malawi ,Savlos Silima ,Lilongwe ,vice president of ,Malawi ,
× RELATED ராணுவ விமான விபத்து மலாவி துணை அதிபர் உட்பட 10 பேர் பலி