×

மலாவி நாட்டின் துணை அதிபர் சவ்லோஸ் சிலிமா பயணித்த ராணுவ விமானம் மாயம்: தேடும் பணி தீவிரம்

லிலொங்வே: கிழக்கு ஆப்பிரிக்கா நாடான மலாவி நாட்டின் துணை அதிபர் சவ்லோஸ் சிலிமா பயணித்த ராணுவ விமானம் மாயமாகியுள்ளது. மலாவி நாட்டின் துணை அதிபர் சௌலோஸ் மற்றும் 9 பேர் பயணம் செய்த ராணுவ விமானம் மலாவி தலைநகர் லிலோங்கில் இருந்து நேற்று காலை 9.17 மணிக்கு புறப்பட்டது. அந்த விமானம் சுமார் 370 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மசுஸு சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்தது.

விமானம் லிலொங்வேயில் இருந்து 45 நிமிடங்களில் அந்த இடத்தை அடைய வேண்டிய நிலையில், அது மாயமாகியுள்ளது. குறிப்பிட்ட இடத்தில் தரையிறங்காததால் ஹெலிகாப்டரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதாக கிராம மக்கள் தெரிவித்ததால் விசாரணை நடைபெறுகிறது. ஹெலிகாப்டரில் பயணித்த மலாவி துணை அதிபர் சவுலஸ் சிலீமா விபத்தில் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் இது குறித்து பேசிய மலாவி நாட்டு அதிபர் லாசரஸ் சக்வேரா; மாயமான விமானத்தை தேடும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தேடுதல் பணியை துரிதமாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாயமான விமானத்தை தேடுவதற்கு அண்டை நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், நார்வே மற்றும் இஸ்ரேல் உள்ளிட்டவைகளிடம் உதவி கோரப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

ஹெலிகாப்டர் விபத்தை அடுத்து மலாவி அதிபர் தனது வெளிநாட்டு பயணத்தை ஒத்திவைத்துள்ளார். ரேடாருக்கு வெளியில் சென்ற விமானத்துடனான தொடர்பை பெற அணைத்து வகையிலும் முயற்சித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post மலாவி நாட்டின் துணை அதிபர் சவ்லோஸ் சிலிமா பயணித்த ராணுவ விமானம் மாயம்: தேடும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Malawi ,Vice President ,Saulo Chilima ,Lilongwe ,Savlos Chilima ,Saulos ,Lilong ,Saulos Chilima ,
× RELATED ராணுவ விமான விபத்து மலாவி துணை அதிபர் உட்பட 10 பேர் பலி