×

ஜூலை 1 முதல் மின் கட்டணம் உயர்வு என்ற செய்தி தவறானது: தமிழ்நாடு அரசு விளக்கம்!

சென்னை: தமிழ்நாட்டில் ஜூலை 1 முதல் மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக பாவும் தகவல் வதந்தியே என தமிழக அரசின் உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் 3 கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகள் உள்ளன. இந்த இணைப்புகளுக்கான மின் விநியோகம் செய்வது முதல் மின்தொடா்பான பணிகள் அனைத்தையும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம், மின்வாரியம் உள்ளிட்ட நிறுவனங்கள் செய்து வருகின்றன.

முன்னதாக தமிழகத்தில் ஜூலை 1 முதல் மின் கட்டணம் உயர இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. சமூக வலைத்தளங்களில் உலாவிய இந்தத் தகவல்கள் மின் நுகர்வோர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் மின் கட்டணத்தை அரசு உயர்த்தியுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவலில் உண்மையில்லை என தமிழக அரசின் உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. 2022ம் ஆண்டு ஜூலையில் வெளியான செய்தி தற்போது புதிரப்பட்டு வருகிறது.

தற்போது மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை; வதந்திகளை நம்பாதீர்கள் என அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

The post ஜூலை 1 முதல் மின் கட்டணம் உயர்வு என்ற செய்தி தவறானது: தமிழ்நாடு அரசு விளக்கம்! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Chennai ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவையும்,...