×

திருவாரூர் இஸ்ரேலை கண்டித்து தவ்ஹீத்ஜமாஅத் ஆர்ப்பாட்டம்

 

முத்துப்பேட்டை, ஜூன் 11: முத்துப்பேட்டையில் இஸ்ரேலை கண்டித்து தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கண்டித்து கண்டன நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. முத்துப்பேட்டையில் பேரூராட்சி அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் யாசர் அரபாத் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், பாலஸ்தீன கடைசி எல்லை ரபாவில் குண்டு மழை பொழிந்து அப்பாவி பொதுமக்களையும் குழந்தைகளையும் கொன்று குவிக்கும் பயங்கரவாத இஸ்ரேலை கண்டிப்பது கோஷம் எழுப்பப்பட்டது.

மாவட்ட பொருளாளர் ஹாஜா மைதீன் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் சபீர் அலி கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில பேச்சாளர் அப்துர் ரஹ்மான், மாவட்ட செயலாளர் அப்துர் ரஹ்மான், மாவட்ட துணை செயலாளர்கள் ஹாஜா மைதீன், முகமது வாசீம் ஆகியோர் கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதில் தெற்கு மாவட்ட ஜமாஅத் கிளை நிர்வாகிகள், மாவட்ட பேச்சாளர்கள் உள்ளிட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட மருத்துவ அணி செயலாளர் அப்துர் ரஹ்மான் நன்றி கூறினார்.

The post திருவாரூர் இஸ்ரேலை கண்டித்து தவ்ஹீத்ஜமாஅத் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Tawheed Jamaat ,Israel ,Tiruvarur ,Muthuppet ,Muthupet ,president ,Yasser Arafat ,Muthupettai ,Palestine ,Dinakaran ,
× RELATED தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம்