×

தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம்

சேலம், ஜூன் 8: சேலம் கோட்டையில், பாலஸ்தீனத்தின் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேலை கண்டித்து தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சித்திக் தலைமை வகித்தார். செயலாளர் தமிமுன் அன்சாரி முன்னிலை வகித்தார். இதில், மாநில செயலாளர் முகமது யூசப், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது, அமெரிக்கா ஆதரவோடு, பாலஸ்தீன குழந்தைகளையும், மக்களையும் கொன்று குவித்து வரும் இஸ்ரேலை கண்டித்தும், இஸ்ரேல் பிரதமரை போர் குற்றவாளியாக அறிவித்து கைது செய்யவும் வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

The post தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Tawheed Jamaat ,Salem ,Salem Fort ,Israel ,Palestine ,Siddiqui ,Tamimun Ansari ,State Secretary ,Mohammad ,Dinakaran ,
× RELATED திருவாரூர் இஸ்ரேலை கண்டித்து தவ்ஹீத்ஜமாஅத் ஆர்ப்பாட்டம்