ராமேஸ்வரம், ஜூன் 11: குருசடை தீவுக்கு படகு சவாரி நிலவரம் குறித்து அறிந்து கொள்ள சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையை தொடர்பு கொள்ள வரவேற்பு செல்போன் நம்பர் அறிவிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் உள்ள குருசடை தீவை சுற்றி பார்க்க பாம்பன் குந்துகால் விவேகானந்தர் மணிமண்டபம் அருகே வனத்துறை சார்பில் சுற்றுலாப் பயணிகளுக்கு படகு சவாரி இயக்கப்பட்டு வருகிறது. தினமும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இயக்கப்படும் இந்த படகு சவாரி கடலின் தட்பவெப்ப நிலையை பொறுத்தே கடல் பயணம் அமையும் என வனத்துறை சார்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கடல் சீற்றம் நேரங்களில் படகு சவாரி பயணம் செய்ய வரும் சுற்றுலாப் பயணிகள் சுற்றிப் பார்க்க முடியாமல் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். சிரமத்தை தவிர்க்க சுற்றுலா பயணிகள் முன்னதாக குருசடை தீவு படகு சவாரி அலுவலக வரவேற்பு செல்போன் நம்பர் 919092526089 என்கிற எண்ணுக்கு தொடர்பு கொண்டு படகு சவாரி பயணம் குறித்த நிலையை அறிந்து கொள்ளும்படி வனத்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
The post படகு சவாரி நிலவரம் அறிய செல்போன் எண் அறிவிப்பு குருசடை தீவுக்கு appeared first on Dinakaran.