×

கனடாவில் இந்தியர் சுட்டுக் கொலை: 4 பேர் கைது

ஒட்டவா: பஞ்சாப்பின் லூதியானாவைச் சேர்ந்தவர் யுவராஜ் கோயல் (28). இவர் கனடாவில் சர்ரே நகரில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வந்தார். கடந்த 2019ல் மாணவர் விசாவில் கனடா சென்ற யுவராஜ் சமீபத்தில் நிரந்தர குடியுரிமை பெற்றுள்ளார்.  இந்நிலையில் கடந்த 7ம் தேதி காலை உடற்பயிற்சி முடித்து விட்டு காரில் வந்து இறங்கிய போது மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்ட யுவராஜ் பரிதாபமாக இறந்தார். இவர் மீது எந்த குற்ற வழக்குகளும் இல்லை. இந்த கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 4 பேரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். இந்தியர் என்பதற்காக யுவராஜ் குறிவைத்து கொல்லப்பட்டாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரிக்கின்றனர்.

The post கனடாவில் இந்தியர் சுட்டுக் கொலை: 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Ottawa ,Yuvraj Goyal ,Ludhiana, Punjab ,Surrey, Canada ,Yuvraj ,Canada ,Dinakaran ,
× RELATED இந்தியா – கனடா இடையே நீடிக்கும் உரசல்.....