×

4 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்கா திரில் வெற்றி

நியூயார்க்: வங்கதேச அணியுடனான டி20 உலக கோப்பை டி பிரிவு லீக் ஆட்டத்தில், தென் ஆப்ரிக்கா 4 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றது. நியூயார்க்கில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த தென் ஆப்ரிக்கா 4.2 ஓவரில் 23 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து திணறியது. ஹெண்ட்ரிக்ஸ் 0, டி காக் 18 ரன் (11 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்), மார்க்ரம் 4, டிரைஸ்டன் ஸ்டப்ஸ் (0) அணிவகுப்பு நடத்தினர். இந்த நிலையில், கிளாஸன் – டேவிட் மில்லர் ஜோடி ஸ்கோரை உயர்த்த கடுமையாகப் போராடியது.

இருவரும் 5வது விக்கெட்டுக்கு 79 ரன் சேர்த்தனர். கிளாஸன் 46 ரன் (44 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்), மில்லர் 29 ரன் விளாசி பெவிலியன் திரும்பினர். தென் ஆப்ரிக்கா 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 113 ரன் எடுத்தது. வங்கதேச பந்துவீச்சில் டன்சிம் 3, டஸ்கின் 2, ரிஷத் 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய வங்கதேசம் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 109 ரன் எடுத்து, 4 ரன் வித்தியாசத்தில் தோற்றது. தவ்கித் ஹிரிடாய் அதிகபட்சமாக 37 ரன் விளாசினார். தென் ஆப்ரிக்க தரப்பில் கேசவ் மகராஜ் 3 விக்கெட்டை வீழ்த்தினார்.

The post 4 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்கா திரில் வெற்றி appeared first on Dinakaran.

Tags : South Africa ,New York ,T20 World Cup Division D league ,Bangladesh ,Dinakaran ,
× RELATED வங்கதேச அணிக்கு எதிராக வெற்றிபெற்றது...