×

நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த புதிய ஆட்சியை மோடி பயன்படுத்த வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய வளர்ச்சிக்கான உந்து சக்தியாக பார்க்கப்படுவது நதிகள் இணைப்பு ஆகும். இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்று ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்பார்க்கிறது. அந்த எதிர்பார்ப்புகளை உணர்ந்து காவிரி- கோதாவரி இணைப்புத் திட்டம் உள்ளிட்ட அனைத்து நதிகள் இணைப்புத் திட்டத்தையும் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நரேந்திர மோடி 3.0 அரசு உடனடியாக தொடங்க வேண்டும். இந்தியாவின் கடைமடை மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடகத்தின் திட்டத்திற்கு தடை விதித்தல், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தும் திட்டத்திற்கு கேரள அரசு போடும் முட்டுக்கட்டைகளை அகற்றுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளையும் புதிய அரசு மேற்கொள்ள வேண்டும். உலக அரங்கில் இந்தியா எட்ட வேண்டிய உயரங்கள் இன்னும் ஏராளமாக உள்ளன. அவற்றுக்காக புதிய ஆட்சிக்காலத்தை மோடி பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மாணவர்களுக்கு வாழ்த்து: அன்புமணி விடுத்த மற்றொரு அறிக்கையில், கோடை விடுமுறை முடிந்து பள்ளி செல்லும் மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

The post நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த புதிய ஆட்சியை மோடி பயன்படுத்த வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Modi ,Anbumani ,CHENNAI ,BAMA ,India ,Cauvery ,Godavari ,Dinakaran ,
× RELATED கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம்...