×
Saravana Stores

மறுடெண்டர் விடும் வரை சென்னை மெரினா, பெசன்ட் நகர் கடற்கரை வாகன நிறுத்தங்களில் இலவசமாக நிறுத்தலாம்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை மெரினா, பெசன்ட் நகர் கடற்கரை உள்பட சென்னையில் உள்ள வாகன நிறுத்தங்களுக்கு மறுடெண்டர் விடும் வரை வாகனங்களை இலவசமாக நிறுத்தலாம் என சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அறிவித்துள்ளனர். சென்னை மாநகராட்சி வருவாயை அதிகரிக்கும் பொருட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் வாகன நிறுத்தங்கள் சென்னையில் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டது . ஆட்சேபனை தெரிவிக்க அவகாசம் குறிப்பாக சென்னையில் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்லும் மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, தியாகராய நகர், அண்ணா நகர் உள்ளிட்ட 170க்கும் மேற்பட்ட இடங்களில் ஸ்மார்ட் வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டது. அங்கு நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனத்துக்கு சென்னை மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது.

மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, தியாகராய நகர் போன்ற இடங்களில் இருசக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.5-ம், 4 சக்கர வாகனங்களுக்கு ரூ.20-ம் கட்டணம் வசூலிக்கவும் மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. ஆனால் சென்னை மெரினா கடற்கரையில் மாநகராட்சி விதிகளை மீறி பஸ், வேன்களுக்கு ரூ.400 வரையும், கார்களுக்கு ரூ.100 முதல் ரூ.300 வரையும், 2 சக்கர வாகனங்களுக்கு ரூ.30 வரையும் கட்டணம் வசூலித்ததாகவும், அதற்கு ரசீதும் கொடுப்பதில்லை எனவும் தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகத்திற்கு புகார் வந்தது. இது ஒரு புறம் எனில், ஒப்பந்த காலம் முடிந்த நிலையில் மேற்கொண்டு அந்த தனியார் நிறுவனத்துக்கு வழங்கிய ஒப்பந்தத்தை நீடிக்காமல், சென்னை மாநகராட்சி அதிரடியாக ரத்து செய்தது.

இதை எதிர்த்து அந்த தனியார் நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் ‘தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. எனவே சென்னை மாநகராட்சி சார்பில் சாலையோர வாகன நிறுத்தத்திற்கு மறு டெண்டர் விடும் வரை மெரினா கடற்கரை, பெசன்ட் நகர், பாண்டி பஜார், தியாகராய நகர் உள்பட மாநகராட்சிக்கு உட்பட்ட எல்லைகளில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டாம். இலவசமாக வாகனங்களை நிறுத்திக்கொள்ளலாம். மிரட்டி கட்டணம் கேட்டால் சம்பந்தப்பட்டவர்கள் குறித்து போலீசில் புகார் அளிக்கலாம் என சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அறிவித்துள்ளனர். எனவே மெரினா, பெசட் நகர் கடற்கரைகளில் தற்காலிகமாக வாகனம் நிறுத்தக் கட்டணம் இல்லை என்பது உறுதியாகி உள்ளது.

The post மறுடெண்டர் விடும் வரை சென்னை மெரினா, பெசன்ட் நகர் கடற்கரை வாகன நிறுத்தங்களில் இலவசமாக நிறுத்தலாம்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai Marina ,Besant Nagar Beach ,Chennai Municipality ,CHENNAI ,MUNICIPAL ,Municipality ,
× RELATED சென்னை மெரினா கடற்கரையில் விரைவில் ரோப் கார் வசதி; மேயர் பிரியா அறிவிப்பு!