×

ராயக்கோட்டையில் மந்த கதியில் நடக்கும் பாலம் கட்டுமான பணி

*போக்குவரத்து நெரிசலால் அவதி

ராயக்கோட்டை : ராயக்கோட்டை வழியாக கேரளா, கோவை, திருச்சி, சேலம் பகுதிகளிலிருந்து தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள், ஓசூர் மற்றும் பெங்களூருக்கு சென்று வருகின்றன.
ஓசூரிலிருந்து தர்மபுரி வரை 4 வழிச்சாலை பணிகள் நடந்துவருகிறது. அதில் பாலம் கட்டுமான வேலைகள் தாமதமாவதால், நேராக செல்ல வேண்டிய வாகனங்கள், ராயக்கோட்டையில் நுழைந்து செல்வதால், தக்காளி மண்டி முதல் போலீஸ் ஸ்டேஷன் வரை, 3 கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து செல்கின்றன.

இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகனங்கள் பஸ் நிலையத்தில் நுழைந்து செல்கிறது. அப்படி செல்வதால் பஸ் நிலையத்திற்கு வரும் பஸ்கள், உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே, சாலை பணிகளை விரைவில் முடித்து, போக்குவரத்து நெரிசலை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ராயக்கோட்டையில் மந்த கதியில் நடக்கும் பாலம் கட்டுமான பணி appeared first on Dinakaran.

Tags : Rayakota ,Mandala Kati ,Avati Rayakot ,Rajkot ,Kerala ,Goa ,Trichy ,Salem ,Hosur ,Bangalore ,Dharmapuri ,Mandala Gati ,
× RELATED சாலையை மறைத்த மூடுபனியால் அவதி