×

கும்மிடிப்பூண்டி அருகே ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ளே புகுந்து அரசு பதிவேடு மற்றும் கம்ப்யூட்டரை உடைத்து நாசம் செய்தவரை பிடிக்க தனிப்படை விரைவு

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த பாத்தபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பார்த்த பாளையம் அம்பேத்கர் காலனி, பஜ்ஜி ரெட்டி கண்டிகை, நேதாஜி நகர், காந்தி நகர், மேட்டு காலனி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலதரப்பட்ட பொதுமக்கள் ஆயிரத்துக்கு மேற்பட்ட வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தை ஒட்டி பல்வேறு மின் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை சிமென்ட் பிளாக் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை இயங்கி வருகிறது.

இந்த கிராமத்தின் மையப் பகுதியில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டிடத்திற்கு தினந்தோறும் ஊராட்சி மன்ற தலைவர் பழங்குடியினத்தைச் சேர்ந்த சாந்தி மற்றும் ஊராட்சி செயலாளர் ஸ்ரீனிவாசன் ஆகியோர் அலுவலகத்திற்கு சென்று குடிநீர் கட்டணம், தொழிற்சாலை வரி, ஆதார் கார்டு பெறுவதற்கான சான்றிதழ் கையொப்பம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு மேற்கண்ட கிராம மக்கள் அலுவலகத்துடன் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை 3:30 மணிக்கு நேதாஜி நகரை சேர்ந்த ராஜா(47) என்பவர் அத்துமீறி அலுவலகத்தில் உள்ளே நுழைந்து கணினி, கணக்கு வழக்கு நோட்டுகள் உள்ளிட்ட பல்வேறு அரசு சார்ந்த ரெக்கார்டுகளை எடுத்துச் சென்றோம் கணினியை சாலையில் போட்டு உடைத்தும் அராஜகமாக சென்றுள்ளார். இது சம்பந்தமாக ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மேற்கண்ட தகவலை கூறியுள்ளனர்.

அதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் அமிர்தமன்னன் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்குமாறு உத்தரவிட்டன் பேரில் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி மற்றும் ஊராட்சி செயலாளர் சீனிவாசன் ஆகியோர் தனித்தனியாக சிப்காட் காவல் நிலையத்தில் அத்திமீறி நுழைந்து ராஜா என்பவர் கணினி மற்றும் அரசு பதிவேடுகளை திருடி சென்றுள்ளார் என புகார் மனு அளித்துள்ளனர். புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜாவை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

பாத்தபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி மற்றும் வார்டு உறுப்பினர்கள் மேற்கண்ட ராஜாவை பிடிக்க தாமதமாக இருப்பதால் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்புகளிடம் மேலும் ஒரு புகார் மனு அளித்துள்ளதாக கிராம வட்டாரங்கள் கூறுகின்றனர். இந்த சம்பவம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பழங்குடியின மக்களிடையே பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post கும்மிடிப்பூண்டி அருகே ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ளே புகுந்து அரசு பதிவேடு மற்றும் கம்ப்யூட்டரை உடைத்து நாசம் செய்தவரை பிடிக்க தனிப்படை விரைவு appeared first on Dinakaran.

Tags : Oratsi council ,Kummidipundi ,PADAPALAYAM URATCHI ,AMBEDGARH COLONY ,BAJJI ,REDDY KANDIGAI ,NETHAJI NAGAR ,GANDHI NAGAR ,METU COLONY ,Dinakaran ,
× RELATED கும்மிடிப்பூண்டி அருகே அடுத்தடுத்து 3...