- முத்தூர் நீரூங்கி
- கும்பகோணம்
- தஞ்சாவூர் கீழ் காவேரி வட்டம் கண்காணிப்பு பொறியாள
- சண்முகம்
- முத்தூர் நீர்த்தேக்கம்
- திருவிதைமாருதூர் தாலூக்
- தஞ்சாவூர் மாவட்டம்
- திருவிடைமருதூர் தாலுக்
- மூதூர்
- காவிரி
- தின மலர்
கும்பகோணம், ஜூன் 10: திருவிடைமருதூர் தாலுகா, முத்தூர் நீரொழுங்கியில் உள்கட்டமைப்புகள் சீரமைப்பு பணிகள் நிறைவு பெற்றதை தஞ்சாவூர் கீழ்காவிரி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் சண்முகம் ஆய்வு செய்தார். தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுகா, முத்தூர் நீரொழுங்கியில் காவிரி உபவடிநிலத்தில் தண்டலாறு மைல் 0/0 முதல் 25/0 வரை மற்றும் இடையார் மைல் 0/0 முதல் 8/0 வரை உள்ள நீர்ப்பாசன உள் கட்டமைப்புகளில் நீட்டித்தல், புனரமைத்தல் மற்றும் நவீனப்படுத்தும் பணிகள் ரூ.111.33 கோடியில் நிறைவுபெற்ற நிலையில் சுமார் 7,144 ஏக்கர் நிலங்களுக்கு பாசனம் வழங்க ஏதுவாக உள்கட்டமைப்புகள் சீரமைக்கப் பெற்றுள்ளது.
இதனை தஞ்சாவூர் கீழ்காவிரி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் சண்முகம் நிறைவுபெற்ற திட்டப்பணிகள் முழுவதையும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது நாகப்பட்டினம் திட்ட செயலாக்க அலகு-2 செயற்பொறியாளர் மரியசூசை, உதவி செயற்பொறியாளர் இளையராஜா, உதவி பொறியாளர் கந்தசாமி மற்றும் பலர் உடனிருந்தனர்.
The post முத்தூர் நீரொழுங்கியில் ரூ.111.33 கோடியில் சீரமைப்பு பணி நிறைவு appeared first on Dinakaran.