×

ஆண்டிமடம் அருகே ஏரியில் குளித்தபோது நீரில் மூழ்கி சிறுமி பலி

 

ஜெயங்கொண்டம், ஜூன் 10: ஆண்டிமடம் அருகே ஏரியில் குளிக்கச் சென்ற சிறுமி தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே கூவத்தூர் மடத்து தெருவை சேர்ந்தவர் கிரகோரி – எமிலி தம்பதியரின் மகள் பிரண்சிகா(14). கூவத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து முடித்துள்ளார். இவர் தனது தாய் மற்றும் உறவினர்களுடன் அங்குள்ள திம்மகுட்டை ஏரியில் குளிக்க சென்றுள்ளார்.

அப்போது ஏரியில் குளித்துக் கொண்டிருந்த பிரண்சிகா திடீரெனஆழத்தில் சிக்கி தண்ணீரில் மூழ்கினார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை நீண்ட நேரம் கழித்து வெளியில் கொண்டு வந்த உறவினர்கள் உடனடியாக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அப்போது அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஏரியில் மூழ்கி சிறுமி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து ஆண்டிமடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post ஆண்டிமடம் அருகே ஏரியில் குளித்தபோது நீரில் மூழ்கி சிறுமி பலி appeared first on Dinakaran.

Tags : Antimadam ,Jayangondam ,Gregori ,Koovathur Mathatu Street ,Antimadam, Ariyalur District ,
× RELATED ஜெயங்கொண்டத்தில் தடை செய்யப்பட்ட...