- கரம்பகுடி அரசு பள்ளி
- கரம்பாக்குடி
- கரம்பக்குடி அரசு பள்ளி
- அரசு மேல்நிலைப்பள்ளி
- வேட்டன்விடுதி
- புதுக்கோட்டை
கறம்பக்குடி, ஜூன் 9: நீட் தேர்வில் வெற்றி பெற்று சாதனை புரிந்த கறம்பக்குடி அரசு பள்ளி மாணவரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே வெட்டன்விடுதி கிராமத்தில் அரசு மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் கடந்த வருடத்திற்கு முன் வெட்டன்விடுதி அருகே உள்ள கணக்கன்காடு கிராமத்தை சேர்ந்த மதன்குமார் என்ற மாணவன் படித்து வந்தார். இவரது தந்தை குமார். தச்சு தொழிலாளி. மதன்குமார் தற்போது கல்லூரியில் படித்து வருகிறார். இவர் மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆசையில் நீட் தேர்வு எழுதுவதற்காக பயிற்சி பெற்றார்.
தற்போது கல்லூரியில் படித்து வரும் மாணவன் மதன் குமார் நீட்தேர்வு எழுதி இருந்தார். தற்போது நீட் தேர்வு முடிவு வெளிவந்ததை அடுத்து மாணவன் மதன்குமார் 720க்கு 620 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.
வெட்டன் விடுதி அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்த தச்சு தொழிலாளியின் மகன் மாணவன் மதன்குமாரை தலைமை ஆசிரியர் மற்றும் பொது மக்கள் உள்ளிட்டோர் பாராட்டினர். நான் மருத்துவம் படித்து டாக்டராக மக்களுக்கு சேவை செய்வதே என்னுடைய முதல் பணி என்று மாணவர் மதன்குமார் தெரிவித்தார்.
The post நீட் தேர்வில் சாதனை கறம்பக்குடி அரசு பள்ளி மாணவருக்கு பாராட்டு appeared first on Dinakaran.