×

தகாத உறவை தட்டி கேட்ட மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு

போடி, ஜூன் 9: போடியில் தகாத உறவை தட்டி கேட்ட மனைவியை சரமாரியாக தாக்கி கொலைமிரட்டல் விடுத்த கணவர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். தேனி மாவட்டம், போடி டி.வி.கே.கே. நகர் நேதாஜி தெருவை சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி (40). வழக்கறிஞர். இவரது மனைவி முனீஸ்வரி (34). சத்துண ஊழியர். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கருத்துவேறுபாடு காரணமாக கடந்த 2016ல் விவகாரத்து பெற்று தனித்தனியாக வசித்து வந்த இருவரும், குழந்தைகளின் எதிர்காலம் கருதி ஒன்றாக வசித்து வருகின்றனர். இதற்கிடையே ஈஸ்வரமூர்த்திக்கு மற்றொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது முனீஸ்வரிக்கு தெரியவந்தது.

இது குறித்து ஈஸ்வரமூர்த்தியிடம், முனீஸ்வரி கேட்டபோது இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஈஸ்வரமூர்த்தி, கல் மற்றும் வீட்டு உபயோக பொருட்களால் முனீஸ்வரியை தாக்கியதுடன், கொலைமிரட்டல் விடுத்து அங்கிருந்து சென்றார். இதில் முனீஸ்வரி பலத்த காயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். பின்னர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். புகாரின்பேரில் போடி நகர் காவல் நிலைய எஸ்.ஐ. இளங்கோவன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

The post தகாத உறவை தட்டி கேட்ட மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Bodi ,Theni District ,D.V.K.K. Iswaramurthy ,Nagar Netaji Street ,Dinakaran ,
× RELATED 96 கி.மீ தூரம் மின்மயமாக்கும் பணி நிறைவு...