×

96 கி.மீ தூரம் மின்மயமாக்கும் பணி நிறைவு போடி- மதுரை மின்சார இன்ஜின் ஸ்டார்ட் ஆகுமா?

*எதிர்பார்ப்பில் பொதுமக்கள்

போடி : போடி-மதுரை இடையே 96 கி.மீ தூரம் மின்மயமாக்கும் பணி நிறைவு பெற்ற நிலையில் மின்சார இன்ஜின் கொண்டு ரயில் இயக்கப்படுமா என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.தேனி மாவட்டம், போடியிலிருந்து தினந்தோறும் மாலை 5.50 மணிக்கு ரயில் புறப்பட்டு 96வது கிலோ மீட்டரில் உள்ள மதுரைக்கு செல்கிறது. மறுநாள் மதுரையிலிருந்து காலை 9.20 மணிக்கு துவங்கி போடிநாயக்கனூருக்கு காலை 10.20 மணிக்கு வந்தடைகிறது. இவ்வாறு போடிக்கு காலையில் வந்து மாலை மதுரைக்கு தினந்தோறும் வாரமும் முழுவதும் டீஸல் இன்ஜின் பொருத்திய ரயில் சேவை நடந்து வருகிறது.

மேலும் வாரத்தில் போடியில் இருந்து திங்கள், புதன், வெள்ளி என மூன்று நாட்களுக்கு இரவு 8.30 மணியளவில் மதுரை வழியாக திண்டுக்கல், கரூர், சேலம், ஈரோடு, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர் வழியாக சென்னை சென்ட்ரல் நிலையம் சென்றடைகிறது.அதேபோல் ஞாயிறு, செவ்வாய், வியாழன் என மூன்று நாட்களுக்கு சென்னையிலிருந்து அதே வழியாக போடிக்கு புறப்பட்டு வந்து மூன்று நாட்கள் இயங்குகிறது. இந்த ரயில் போடியில் இருந்து இயங்கும் போது மதுரை வரை டீசல் இன்ஜினில் இயங்குகிறது. அதற்கு மேல் சென்னை வரை மின் மயமாக்குதலாக இருப்பதால் டீசல் இன்ஜின் நிறுத் தப்பட்டு மின்சார இன்ஜின் மூலமாக இயக்கப்படுகிறது.

பல ஆண்டுகளுக்கு முன் இருந்த குறுகிய ரயில்வே தண்டவாள சாலையை அகலரயில் பாதையாக மாற்றி அதிவேக ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வியாபாரிகள் பொதுமக்கள் ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசிடம் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து கடந்த 2010ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி குறுகிய ரயில்வே போக்குவரத்து சேவைக்கு மூடு விழா காணப்பட்டது. ஒன்றிய அரசு மாநில அரசிடம் 25% நிதி ஒதுக்கப்பட வேண்டும் என கேட்டது. அதற்கு அப்போதையை முதல்வராக இருந்த ஜெயலலிதா நிதி ஒதுக்க முடியாது என மறுத்து விட்டார். மேலும் திட்டமிட்டு நிறுத்திய படி ரயில் தண்டவாளம் பிடுங்கபட்டு அப்படியே அகல ரயில் பாதைக்கு பணிகள் எதுவும் துவங்காமல் முடக்கப்பட்டது.

பின்னர் ரூ.170 கோடி மதிப்பீட்டில் 7 ஆண்டுகளுக்கு பின் பணிகள் துவங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதில் இரண்டாம் கட்டமாக ரூ.230 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அணைத்து பணிகளும் நிறைவு பெற்று மதுரையிலிருந்து தேனி வரை 11 ஆண்டுகள் கழித்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் சென்னையில் பிரதமர் மோடி கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
பாக்கியுள்ள தேனி ரயில்வே ஸ்டேஷனலிருந்து போடி சுப்பு ராஜ் நகர் ரயில்வே ஸ்டேஷன் வரையில் 16 கிலோ மீட்டர் அகல ரயில் பாதை பணிகளும் நிறைவு செய்தனர். 120 கிலோ மீட்டர் வேகத்தில் அதிவேக இன்ஜினை ஓட விட்டு பரிசோதனையும் செய்து முடிக்கப்பட்டது.

பின்னர் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் போடியிலிருந்து மதுரை வழியாக சென்னை வரை அதிவேக ரயில் சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தார். கொச்சின்-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையாக தமிழக கேரளா எல்லையான போடிமெட்டு வழியாக போடி கடந்து தேனி மதுரை தனுஷ்கோடி வரை சென்றடைகிறது. தொடர்ந்து போடியில் இருந்து மதுரை வரை செல்லும் பயணிகள் ரயில் டீசல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது.

அதனை மாற்றி அமைக்கும் விதமாக டீசல் இன்ஜினை நிறுத்தி மின் மயமாக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. இந்நிலையில் ரூ.96.4 கோடியில் மின் ரயில் பாதை அமைக்கப்பட்டது. கடந்த ஆறு மாதங்களாக மின் மயமாக்குதல் பணிகள் சுமார் 96 கிமீ தூரம் நடைபெற்று வந்தது. அகல ரயில் பாதை வழியாக அதற்கான மின்சார வயர்கள் தாங்கி செல்லும் கட்டமைப்புகள் அமைக்கப்பட்டு மின்சார வயர்கள் பொருத்தப்பட்டு பணிகள் முடிந்து தயாராக உள்ளது.

எனவே விரைவில் போடி மதுரை செல்லும் டீசல் இன்ஜின் பகுதியை நிறுத்திவிட்டு ஏற்கனவே தயாராக இருக்கும் மின்சார லயன் மூலமாக இயக்கு வதை விரைவில் இயக்கு துவங்கிட வேண்டும் மிகுந்த எதிர் பார்ப்பில் உள்ளனர். மேலும் பயணிகள் பொதுமக்க ளும் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

800 மீட்டர் தூரம் பாலம்

போடி முந்தல் சாலையில் உள்ள கொட்டகுடி ஆற்றின் துணை வாய்க்காலான ரெட்டை வாய்க்கால் அருகில் சாலை குறுக்கே ரயில்வே கிராஸிங் வருவதால் போடி சுப்புராஜ் நகர் ரயில்வே ஸ்டேஷனுக்கு ரயில் கட க்கும் போது கேட்டை அடைத்து போக்குவரத்தை நிறுத்தி ரயிலை கடக்கும் சூழ்நிலை இருந்து வருகிறது.தேசிய நெடுஞ்சாலைகளில் கேட் அடைப்பதற்கு விதி முறைகளில் இடம் இல்லை. எனவே மேம்பால வசதி ஏற்படுத்தி ரயில் மற்றும் வாகனங்கள் போக்குவரத்து இயக்க வேண்டும் என்று உத்த ரவு உள்ளது.

தமிழக கேரள அரசுகளின் பஸ்கள், தனியார் பஸ்கள் தூத்துக்குடி கொச்சின் துறைமுகம் நேரடி தொடர்பும் இருப்பதால் கண்டெய்னர் லாரிகள், சரக்கு லாரிகள் விவசாய வாகனங்கள், தொழிலாளர்கள் செல்லும் ஜீப் வேன் என தொடர்ந்து இச்சாலையில் அதிகளவு கடக்கும். போக்குவரத்தினை நிறுத்தாமலும் ரயில்வே கிராஸ் பகுதிகளில் தடை இல்லாமல் செல்ல ரயில்வே மேம்பாலம் ரூ.45 கோடி மதிப்பீட்டில் தீவிரமாக 800 மீட்டர் வரை நடைபெற்று வருகிறது.

போடி முந்தல் சாலை ரயில் ரெட்டை வாய்க்கால் வலசத்துறை சாலை பிரிவு இடையிலிருந்து மேம்பாலம் துவங்கி ரயில்வே கிராஸ் கடந்து ஸ்பைசஸ் போர்டு அலுவலகம் வரை யில் 800 மீட்டர் தூரம் ரயில்வே மேம் பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. ரயில்வே மேம் பாலத்தினை 1.80 மீட்டர் அகலம் கொண்ட உயரமான மேம்பாலம் 23 தூண்கள் வரிசையாக தாங்கி மேம்பாலச்சாலை 13 மீட்டர் அகலத்தில் 800 மீட்டர் நீளத்தில் உருவாகி வருகிறது.

நிலக்கரி இன்ஜின் பயணம்

தேனி மாவட்டம், போடி சுப்புராஜ் நகரிலிருந்து தேனி, ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, செக்கானூரணி வழியாக மதுரை வரை குறுகிய ரயில் பாதையாக 84 ஆண்டுகள் லக்கேஜ், மற்றும் பயணிகள் சேவை ரயிலாக நிலக்கரி இன்ஜின் மூலமாக இயக்கப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1913ம் ஆண்டு துவங்கிய இந்த குறுகிய ரயில் பாதையின் பணிகளை இயந்திரங்கள் எதுவும் இன்றி மேன் பவரில் 13 ஆண்டுகளில் 96 கிலோ மீட்டர் ரயில் பாதையை முடித்து 1926ம் ஆண்டு ஏலக்காய், காப்பி தேயிலை என நறுமண பணப்ப யிர்கள் மற்றும் இலவம், மா, எலுமிச்சை என சுமந்து செல்லும் ரயிலாக துவக்கப்பட்டு மதுரையிலிருந்து இங்கிலாந்து நாட்டிற்கு விமானத்தில் எடுத்து சென்றனர்.

The post 96 கி.மீ தூரம் மின்மயமாக்கும் பணி நிறைவு போடி- மதுரை மின்சார இன்ஜின் ஸ்டார்ட் ஆகுமா? appeared first on Dinakaran.

Tags : Madurai ,Bodi ,Theni district ,Dinakaran ,
× RELATED தகாத உறவை தட்டி கேட்ட மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு