×

‘எக்ஸ்கியூஸ் மீ… சாப்பிட என்ன இருக்கு?’ வீட்டுக்கு வந்த அழையா விருந்தாளி யானையின் வீடியோ வைரல்

கோவை: கோவையை அடுத்த தொண்டாமுத்தூர் மற்றும் மருதமலை வன கோட்டத்துக்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளன. இவை, இரவு நேரங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேடி கிராமங்களில் உள்ள வீடுகளில் புகுந்து அரிசி, புண்ணாக்கு உள்ளிட்டவற்றை சாப்பிட்டு விட்டு செல்கின்றன. இந்நிலையில், தொண்டாமுத்தூர் அடுத்த வண்டிக்காரனூர் பகுதியில் உள்ள பன்னீர்செல்வம் என்பவரது தோட்டத்திற்குள் நுழைந்த இரு காட்டு யானைகள் விளைநிலங்களில் இருந்த பயிர்களை சாப்பிட்டுவிட்டு, அங்கிருந்த தோட்டப்பணியாளர்களின் குடியிருப்பை முகாமிட்டன.

அப்போது, ஒரு காட்டு யானை, ஒரு வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து சாப்பிட ஏதாவது கிடைக்குமா? என துதிக்கையால் தேடி காய்கறிகளை எடுத்து சாப்பிட்டது. இந்த யானையை பார்த்ததும் வீட்டிலிருந்த தோட்ட பணியாளர்கள் அச்சத்தில் உறைந்தனர். அப்போது தோட்ட பணியாளர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுக்க மற்றொருவர், “வீட்டில் ஒண்ணும் இல்ல சாமீ…. அவ்வளவுதான்…. போ சாமீ…’’ என யானையிடம் பேச்சுவார்த்தை நடத்தி, திருப்பி அனுப்ப முயன்றார். ஆனாலும், அந்த யானை செல்லவில்லை. சிறிது நேரம் அங்கேயே நின்று தேடுதல் வேட்டை நடத்திவிட்டு, சுமார் 10 நிமிடம் கழித்துதான் சென்றது. இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

The post ‘எக்ஸ்கியூஸ் மீ… சாப்பிட என்ன இருக்கு?’ வீட்டுக்கு வந்த அழையா விருந்தாளி யானையின் வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Western Ghats ,Thondamuthur ,Marudamalai ,
× RELATED மேற்கு தொடர்ச்சி மலையில் சாரல்: ஆறுகளில் நீர்வரத்து அதிகரிப்பு