×
Saravana Stores

நீட் தேர்வில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை: தேசிய தேர்வு முகமை விளக்கம்!

டெல்லி: நீட் தேர்வுக்கு முன்பாக வினாத்தாள் கசிந்ததாக வெளியான தகவலுக்கு தேசிய தேர்வு முகமை மறுப்பு தெரிவித்துள்ளது. நீட் தேர்வில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை என தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது. 6 மையங்களில் முறைகேடு நடந்ததாக எழுந்துள்ள நீட் தேர்வு புகார் குறித்து குழு அமைத்து விசாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் வினாத்தாள் கசிவு மற்றும் மதிப்பெண் குளறுபடி தொடர்பான புகார்கள் எழுந்த நிலையில், டெல்லியில் உயர்கல்வித்துறை செயலாளர் சஞ்சய் மூர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது; சுப்ரீம் கோர்ட்டு 2018ல் வெளியிட்ட வழிகாட்டுதல்களின் படியே நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. ஒரு கேள்விக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டு உள்ளது. கருணை மதிப்பெண் கொடுத்ததால் மைனஸ் மதிப்பெண் பெற்றவர்களும் முழு மதிப்பெண் கொடுத்துள்ளனர். நீட் தேர்வில் எந்த சமரசமும் செய்யப்படவில்லை. எங்கும் நீட் வினாத்தாள் கசிவு என்பது நடைபெறவில்லை.

தவறான வினாத்தாள் காரணமாக 1,600 பேருக்கு மறு தேர்வு நடத்தப்பட்டுள்ளது. முழு தேர்வு செயல்முறையும் மிகவும் வெளிப்படையானது. நீட் முறைகேடு குறித்து விசாரிக்க யுபிஎஸ்சி முன்னாள் தலைவர் தலைமையில் குழு அமைக்கப்படும். தேர்வு மையங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குழு விசாரிக்கும். இந்த குழு, ஒரு வாரத்தில் விசாரித்து அறிக்கை வழங்கும். இந்த குழு வழங்கும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

 

The post நீட் தேர்வில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை: தேசிய தேர்வு முகமை விளக்கம்! appeared first on Dinakaran.

Tags : NATIONAL SELECTION AGENCY ,Delhi ,National Examination Agency ,Neet ,Dinakaran ,
× RELATED கேள்வித்தாள் வெளியானதால் மாற்றப்பட்ட...