×

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்; அல்காரஸ்-ஸ்வெரேவ் இறுதி போட்டிக்கு தகுதி

பாரீஸ் நகரில் நடந்து வரும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் நேற்றிரவு நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் அரையிறுதியின் முதல் போட்டியில் இத்தாலியை சேர்ந்த 2-ம் நிலை வீரர் ஜானிக் சின்னர், 3-ம் நிலை வீரரான ஸ்பெயினை சேர்ந்த கார்லஸ் அல்காரசுடன் மோதினார். இருவரும் அனல்பறக்க ஆடியதால் முதல் 4 செட்டுகளை இருவரும் தலா 2 என வசப்படுத்திய நிலையில், கடைசி செட் மேலும் பரபரப்பானது. ஆனால் இறுதி செட்டில் அல்காரஸ் தனது சாமர்த்தியமான அதே நேரத்தில் வேகமான ஆட்டத்தால் வெற்றி பெற்றார்.

4 மணி 9 நிமிடம் நீடித்த இந்த போட்டியில் அல்காரஸ் 2-6, 6-3, 3-6, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் சின்னரை வெளியேற்றி பிரெஞ்சு ஓபனில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். 2-வது அரையிறுதி போட்டியில் நார்வேயை சேர்ந்த கேஸ்பர் ரூட் (நார்வே), ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் ஆகியோர் மோதினர். இதில் முதல் செட்டை ரூட் 2-6 எனக் கைப்பற்றினார். அதன்பின் ஸ்வெரேவ் ஆட்டத்திற்கு ரூட்டால் ஈடுகொடுக்க முடியவில்லை. அடுத்த மூன்று செட்டுகளையும் ஸ்வெரேவ் 6-2, 6-4, 6-2 என கைப்பற்றி வெற்றி பெற்றார். இதனால் நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் அல்காரஸ்- ஸ்வெரேவ் சாம்பியன் கோப்பையை கைப்பற்ற பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.

 

The post பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்; அல்காரஸ்-ஸ்வெரேவ் இறுதி போட்டிக்கு தகுதி appeared first on Dinakaran.

Tags : French Open Tennis ,Algarez-Zverev ,French Open ,Paris, ,Italy ,Janic Sinner ,Carlos Algaraz ,Spain.… ,Alcaraz-Zverev ,Dinakaran ,
× RELATED பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் பைனல்: ஸ்வியாடெக் – ஜாஸ்மின் இன்று பலப்பரீட்சை