×

நாளை டிஎன்பிஎஸ்சி தேர்வு

கடலூர், ஜூன் 8: கடலூர் மாவட்டத்தில் நாளை(9ம் தேதி) முற்பகல் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், தொகுதி 4-ல் அடங்கிய பல்வேறு பதவிகளுக்கான போட்டி தேர்வு நடைபெற உள்ளது. மேற்படி தேர்வானது முற்பகல் 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணிவரை நடைபெற உள்ளது. தேர்வு மையத்திற்கு தேர்வர்கள் காலை 8.30 மணிக்கு வருகைபுரிய அறிவுறுத்தப்படுகிறார்கள். கூடுதலாக காலை 9 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள். காலை 9 மணிக்கு பிறகு வருகைபுரியும் தேர்வர்கள் தேர்வு கூடத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

தேர்வர்கள் தேர்வாணையத்தின் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு உடன் தேர்வு நடைபெறும் இடத்திற்கு குறித்த நேரத்திற்குள் வரவேண்டும். தவறும் பட்சத்தில் தேர்வர்கள் தேர்வுக்கூடத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வர்கள் தங்களுடைய ஆதார் அடையாள அட்டை, கடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம், நிரந்தர கணக்கு எண், வாக்காளர் அடையாள அட்டையின் அசல் (அல்லது) நகல் ஆகியவற்றின் ஏதேனும் ஒன்றின் நகல் உடன் தேர்வுக்கூடத்திற்கு கொண்டுவர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் அறிவித்துள்ளார்.

The post நாளை டிஎன்பிஎஸ்சி தேர்வு appeared first on Dinakaran.

Tags : TNPSC ,Cuddalore ,Tamil Nadu Public Service Commission ,Cuddalore district ,Dinakaran ,
× RELATED திருப்பூர் மாணவி முதலிடம்